முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சவுதியில் செல்போன் சிம்கார்டு பயன்படுத்த கடும் கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.



சவூதி, பிப்ரவரி 12/2016: ஃபிங்கர் ப்ரிண்ட் பதிவு செய்தால் தான் இனி உங்கள் சிம் பயன்படும், இல்லை என்றால் கனெக்‌ஷன் துண்டிக்கப்படும்.இதனால் உள்நாட்டு பாதுகாப்பு மேம்படும் என்றாலும், கடும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.


சிம் கார்டு தொலைந்து விட்டால் உடனே போய் அதை ரத்து செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்த நம்பரை வைத்து வேறு வகையில் தவறான காரியங்களுக்கு யாரேனும் பயன்படுத்தினால், சிம்முக்குறிய நபர் தான் தண்டிக்கப்படுவார்.

அதே போல் இனி நெட் சிம் கார்டு பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.. ஏனெனில் அதற்கும் கை ரேகை அவசியம் என மெசேஜ் வந்திருக்கு.சாதாரணமாக சவுதியில் ரீசார்ஜ் செய்வது கூட சுலபமில்லை, ஏன்னில் நம்ம ஊரில் பயன்படுத்துவது போல் கார்டை சுரண்டி ரகசிய நம்பரை பதிவேற்றினால் ரீசார்ஜ் ஆகிவிடுது போல் சுலபான காரியம் அல்ல, இங்கே ரீசார்ஜ் ரகசிய நம்பருடன் சவுதி அரசால் கொடுக்கப்பட்டு இருக்கும் இகாமா ஐடியின் நம்பரையும் பதிவு செய்தால் தான் ரீசார்ஜ் ஆகும்.

ஒருவர் சிம்மில் இன்னொருவர் ஐடி நம்பர் போட்டு ரீசார்ஜ் கூட செய்ய முடியாதளவுக்கு கடும் கட்டுப்பாடு உள்ளது.

அப்படி இருக்கும் போது தற்போது கைரேகை பதிவு செய்ய சொல்வது இன்னும் கடுமையான விதிமுறைகளை தொலைதொடர்பு துறை விதித்துள்ளதை காட்டுகிறது.

நம்ம ஊர்ல ஒரு சிம் கார்டு இல்லை பத்து சிம் கார்டு கூட யாரோ ஒருத்தரின் ஜெராக்ஸ் ஐடி இருந்தால் கூட வாங்கிடலாம், இங்கேயும் அப்படி தான் இருந்தது, ஆனால் பாதுக்காப்பை பலப்படுத்த நினைத்து பார்க்க முடியாதளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கு என்பது தான் ஆச்சரியம்,அதை விட ஆச்சரியம் அதை செயல்படுத்தி காட்டுகிறார்கள் என்பது தான்.

கைரேகை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள சிம் நிறுவனத்தின் கிளைகளை தொடர்பு கொண்டு கைரேகை பதித்து விடுங்கள், இல்லை எனில் விரைவில் தொடர்பு துண்டிக்கப்படும்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)