முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

வளைகுடா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை !



உலகம், பிப்ரவரி 08/2016: வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அந்த நாடுகளில் வேலைக்கு சென்ற இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல லட்சம் பேர், சொந்த ஊர் திரும்புகின்றனர்.

குவைத், பக்ரைன், கத்தார், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள். இவை, வளைகுடா நாடுகள் என, அழைக்கப்படுகின்றன.இங்கு, கச்சா எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும், வெளிநாட்டு பணியாளர்களையே நம்பி உள்ளனர். பொறியாளர்கள், செவிலியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், வீட்டுப் பணியாளர்கள் என, பெரும்பாலான பணிகளில், வெளிநாட்டினரே ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து, 50 லட்சம் – 70 லட்சம் தொழிலாளர்கள் அங்கு சென்று பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த, 10 லட்சம் – 15 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

கடந்த, 10மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தையில், அமெரிக்காவின் கொள்முதல் குறைவு; ஈராக் எண்ணெய் ஏற்றுமதிக்கு இருந்த தடை நீக்கம்; வளைகுடா நாடுகளின் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு ஆகியவற்றால், கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், பல எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு சென்றுள்ளன. தொடர்ந்து செயல்படும் நிறுவனங்களில், ஊதிய உயர்வு நிறுத்தம்; பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதி போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெய் மூலம் கிடைத்த வருவாயில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, வளைகுடா நாடுகளின் அரசுகள், புதிய வரிகளை விதிக்க துவங்கி விட்டன. குறிப்பாக, மின் கட்டணம்கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. நிறுவனங்கள் அளிக்கும் குடியிருப்பு வசதி ரத்து செய்யப்பட்டதால், வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்து விட்டது. வருமான வரி, 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதோடு, 4 சதவீத மதிப்புக் கூட்டு வரி, புதிதாக அறிமுகம்செய்யப்பட்டு உள்ளது. பள்ளி கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், வெளிநாட்டில் இருந்து சென்ற தொழிலாளர்களின், மாத வருவாயை முழுவதுமாக செலவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், குடும்பத்துடன் வசித்து வந்த, இந்திய தொழிலாளர்கள், குடும்பங்களை, இந்தியாவுக்கு திரும்ப அனுப்புகின்றனர். தனியாக வசித்து வந்த பல தொழிலாளர்கள், மாத வருமானம் போதாத நிலையில், நாடு திரும்புகின்றனர்.

இப்படி நாடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்களின் மறுவாழ்வுத் திட்டங்களை, கேரள மாநில அரசு உருவாக்கி வருகிறது. தமிழக தொழிலாளர்கள் கொஞ்சம், கொஞ்சமாக நாடு திரும்பி வருவதால், அரசின் முழு கவனம், இன்னும் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.

ஒரு பெண்ணை பெற்றோர்கள் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறைகள்



உலகம், பிப்ரவரி 08/2016: அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதே நபவியில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுசமயம் , சல்மான் ஃ பார்சீ [ரலி] அவர்கள் அங்கு வந்து, அண்ணலார் [ஸல்] அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா [ரலி] அவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.'' என்று கூறினார்கள்.


உடனே நபி [ஸல்] அவர்கள் தம் மகளார் வீட்டிற்கு விரைந்தார்கள். வீட்டில் ஃபாத்திமா [ரலி] அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அண்ணலார் [ஸல்] அவர்கள் தம் மகளாரிடம் அழுகைக் காரணத்தைக் கேட்டனர்.

மகளார்: ''அன்புள்ள தந்தையே! நானும் எனது கணவரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம்,, விளையாட்டு வினையாகிவிட்டது. பேச்சுனூடே என் கணவர் '' பெண்கள் ஷைத்தான்களாவர் .. உங்களை எங்களுக்காக படைக்கப்பட்டது,, நாங்கள் அந்த ஷைத்தான்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் விடத்தில் காவல் தேடுகிறோம். '' என்று கூறினார்கள் .

நான் உடனே, ''நிச்சயமாக பெண்கள் ரைஹான் இலைகளைப் போன்றவர்கள்,, அவைகளை உங்களுக்காக படைக்கப்பட்டது,, நீங்கள் எல்லாம் ரைஹான்களை முகர்ந்திட ஆசைப்படுகின்றீர்கள் .'' என்று பதில் கூறினேன். இச் சொல் என் கணவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. உடனே அவர்கள் வீட்டை விட்டும் புறப்பட்டு விட்டார்கள்,, எனவே தான் அழுது கொண்டிருக்கிறேன்.''

மகளாரின் மொழி கேட்டு அண்ணலார் [ஸல்] அவர்கள் மருகர் அலீ [ரலி] அவர்களைத் தேடித் புறப்பட்டார்கள். கடை வீதி, பள்ளி வாசல் முதலிய இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஜன்னத்துல் பகீ உ , என்னும் கப்ருஸ்தானில் அலீ [ரலி] அவர்களை கண்டார்கள்.

அது சமயம் அலீ [ரலி] அவர்கள் , ஒரு பாழடைந்த கப்ரில் ஓர் ஈச்சமரத்தின் கீழ், தலைக்கு மண் கட்டி ஒன்றை வைத்தவர்களாக, ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருந்தார்கள். வீட்டில் அமைதி குலைந்து விட்டால் மண வாழ்க்கையும் மண்ணறை போன்றுதானே!
அண்ணலார் [ஸல்] அவர்களின் அருகில் சென்று, 
''யா அபுத்துராப், கல் என்ன சொல்கிறது? '' எனக் கேட்டார்கள்.

அண்ணலாரின் குரல் கேட்டு துள்ளி எழுந்தார்கள் அலீ [ரலி] அவர்கள். அவர்களைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

வீட்டின் வாய்ற்படியருகே வந்து, ''அஸ்ஸலாமு அழைக்கும் யா ஃபாத்திமா ! உனது தந்தையும் , கணவரும் வந்திருக்கின்றோம். உள்ளே வரலாமா?'' என அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றனர்.

தமது மகளாரை விளித்து, ''மகளே! உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்புக் கேள் .'' என்றார்கள் . பாத்திமா [ரலி] அவர்கள் தனது கணவராம் அலீ [ரலி] அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.

தமது மகளைப் பார்த்து ''மகளே! உன்னுடைய கணவர் உன் மீது அதிருப்தி கொண்டநிலையில், உனக்கு மரணம் நேரிட்டிருக்குமாயின் நீ சுவனத்தின் மணத்தைக் கூட முகர்ந்திருக்க முடியாது போயிருப்பாய்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான் .'' எனக் கூறிவிட்டு சென்றார்கள்.

சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள், நம் குடும்பத்தில் கணவர் மனைவியர்களிடையே கசப்புணர்ச்சிகள் , சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அந்நிலையில் எம்முறையில் நாம் நடந்து கொள்கிறோம்?
'' அவன் கிடக்கிறான் வெறும்பயல். நீ வீட்டிற்கு வந்துவிடும்மா ? உண்ண உணவும் , உடுத்த உடையும் உனக்கு இல்லையென்றா அவன்தலையில் கட்டினோம்? நீ இங்கேயே இருந்துவிடு. சோறும், துணிமணிகளும் நாங்கள் தருகின்றோம். அவனோடு வாழ்ந்து போதும் .''

இவ்வாறெல்லாம் சில பெற்றோர்கள் தம் பெண்மக்களுக்கு நசீஹத்து செய்து, அவள் செய்துவிட்ட தவறுகளை அவள் உணர முடியாமலே செய்துவிடுவதுடன், அவளது மணவாழ்க்கையையும் வீணடித்து விடுகின்றனர்,, அது மட்டுமின்றி, அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உரியவளாகவும் அவளை ஆக்கிவிடுகின்றனர்.

ஆனால், அகிலத்திண் அருட்கொடை அண்ணல் நபி [ஸல்] அவர்களோ எல்லாவற்றுக்கும் முன்மாதரியாக திகழ்ந்த காரணத்தால், சுவர்க்கத் தலைவி என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தும், தனது மகளாரின் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், மணாலரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்து, அவ்விருவரின் வாழ்க்கையையும் மனமுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்து நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்..


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)