முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காப் பஞ்சாயத்து விதைத்தது வன்முறை என்றால் தி ஹிந்துவின் கட்டுரைக்கு என்ன பெயர்?




சென்னை, பிப்ரவரி 05/2016: நேற்றைய தேதியிட்ட தமிழ் ஹிந்து நாளேட்டில், சமஸ் என்பவர் ''இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால் வஹாபியிசத்திற்கு என்ன பெயர்?'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
(Counter criticism to 'The Hindu (Tamil) ' over it's criticism about Thowheed thoughts!)

இந்த கட்டுரையை இணைய தளத்தில் வெளியிட்டுள்ள ஹிந்து ஏடு '' (இதை படிக்கத்) தவறாதீர்! என்ற அறிவிப்போடு வெளியிட்டிருகிறது.
இதை படியுங்கள் என கூவிக் கூவி ஹிந்து நாளேடு அழைப்பதன் பின்னணி நிச்சயமாக உள்நோக்கம் கொண்டதுதான்!
அண்மையில் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய
'ஷிர்க் ஒழிப்பு மாநாடு'' ஏற்படுத்திய வயிற்றெரிச்சலை வார்த்தைகளாக விரவ விட்டிருக்கிறார் சமஸ்.
தௌஹீத், வஹாபியிசம், மதச்சார்பின்மை, இந்துத்துவம், அடிப்படைவாதம் என அனைத்தையும் போட்டு குழப்பி தானும் குழம்பி படிப்பவர்களையும் குழப்பி எடுத்திருக்கிறார் கட்டுரையாளர் சமஸ்.
எதிலும் முறையான ஆய்வில்லாமல் பக்கம் அல்லது பத்தி எழுத பிரபல ஏடுகளில் வாய்ப்பு வேண்டுமென்றால் நீங்கள் இஸ்லாத்திற்கு/முஸ்லிம்களுக்கு எதிராக எழுதவேண்டும். இந்த சிந்தனையைதான் ஏற்படுத்துகிறது ஹிந்துவின் இந்தகட்டுரை.
ஏகத்துவ சிந்தனையாளர்களுக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கி இருப்பதோடு அவர்களை ஏனைய மதங்களுக்கு எதிரிகளாக சித்தரிக்க ரொம்பவே மெனக்கெடுகிறார் கட்டுரையாளர்.
இனி அவரது கருத்துக்களிலிருந்து:

''திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.”

“எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா?''
''இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது,  தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…'' இது ஷிர்க் என்றால் என்ன என்ற சமசின் கேள்விக்கு அவரது தோழர் சொல்லும் பதில்! இந்தபதிலில் பழுதில்லை.
ஆனால்,
''ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்''- என்று சமஸ் வலிந்து திணிக்கின்ற- தௌஹீத் சிந்தனைவாதிகள் கடப்பாரையை கையில் வைத்துக்கொண்டு தர்காக்களை இடிக்க அலைவதாக சித்தரிக்கின்ற கருத்து விஷமத்தனமானது!

முப்பது ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஏகத்துவ பிராச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏகத்துவவாதிகள் இதுவரை ஒரு தர்காவை இடித்ததாக ஒரே ஒரு சம்பவம்உண்டா? ஏகத்துவ வாதிகளை வன்முறையாளர்களாக சித்தரிக்க மெனக்கெடுகிறார் சமஸ்.

(தர்காக்களை இஸ்லாம் ஏன் இடிக்கச் சொல்கிறது என்பது வேறு விஷயம். இது குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு விளக்கம்அளிப்போம். இங்கே நமது பதில் திரு. சமசின் கருத்துக்களுக்குதான்)
அடுத்ததாக....

இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?”

இவையும், ஷிர்க் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு தொடர்ந்து சமஸ் தன்னிச்சையாக எழுப்புகின்ற கேள்விகள்தான். தனது கோரமான கருத்துக்களை எப்படிவிதைக்கிறார் சமஸ்.! ஏகத்துவ சிந்தனைவாதிகள் வன்முறையாளர்கள் என்ற கற்பிதத்தையும் தாண்டி மிக சூட்சுமத்தோடு பரப்புரை மேற்கொள்வதோடு, தொப்புள் கொடி உறவுகளாக இருக்கின்ற பிறசமய மக்கள் மத்தியில் வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்த வல்லது இவ்விஷக்கருத்து ஏகத்துவவாதிகள் தர்காக்களை இடித்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற இவரது கருத்தை இவரே உறுதிசெய்து கொண்டு, நாளை ஏகத்துவவாதிகளின் கைஓங்கினால் நிலைமை என்னவாகும்? கோவில்களையும், தேவாலயங்களையும் இடிப்பார்கள் சாமி சிலைகளை உடைத்து நொறுக்குவார்கள் (பிறசமயதவர்களே புரிந்து கொள்ளுங்கள்) என்று ஏகத்துவவாதிகளுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக பிறசமயத்தவர்களை கொம்பு சீவிவிடும் வேலையை கச்சிதமாக செய்கிறார் சமஸ்.
சமஸ் என்ற கட்டுரையாளரின் முதுகுக்கு பின்னால் இருந்து கொண்டு இந்து ஏடு இந்தவேலையை செய்கிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.தப்பில்லை.

''லவ் ஜிஹாத் என்ற பெயரால் ஹிந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் இழுத்து செல்கிறார்கள்'' என்று விஷக் கருத்தை விதைத்து முசாபர் நகர் கலவரத்திற்கு வித்திட்ட 'ஜாட் 'களின்மஹா காப் பஞ்சாயத்துக்கு தமிழ் ஹிந்து நாளேட்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

இன்னொருபுறம், இடவொதுக்கீடு உட்பட இன்றைக்கு தமிழக முஸ்லிம்களின் உரிமைப்பிரச்சினை, ஜீவாதாரக் கோரிக்கைகள் ஆகியவற்றை அரசியல்ரீதியாக வலிமையாக எழுப்புகின்ற அமைப்புகளாகவும் தமிழக முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாகவும் தௌஹீத் அமைப்புகள்தான் களத்தில் நிற்கின்றன. இந்த அமைப்புகளின் செல்வாக்கு உயர்ந்துவிடக்கூடாது. அனைத்துத் துறைகளிலும் இவர்களது கை ஓங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சமிக்ஞையை யாருக்கு தருகிறது ஹிந்து ஏடு?.

மேலும் ''காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இது'' என்கிறார் கட்டுரையாளர்.

முட்டாள்தனமான இந்த கருத்து எப்படி இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணமாகும்? ஒருவர் எப்படி ஹிந்துவாக,முஸ்லிமாக, கிறித்தவனாக,யூதனாக ஒரே நேரத்தில் இருக்கமுடியும்? இவரை கொள்கையற்றவர் என்றுதான்சொல்லமுடியும்? இவர் எல்லா மதத்தினரையும் ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்! இன்னும் இதுகாந்தியின் தனிப்பட்டகருத்தாக இருக்கமுடியுமே தவிர மதச்சார்பின்மையின் இலக்கணமாக இதை அறிவுடைய எவரும் ஏற்க இயலுமா? எம்மதமும் சம்மதம் என்ற இந்தகருத்து மதச்சார்பின்மை ஆகாது.

''மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பதுபோல் பொருள் சொல்கிறார்கள்'' என்கிறார் தந்தை பெரியார். சமஸ் போன்ற ஆட்களுக்குதான் அன்றே பெரியார் சொல்லியிருக்கிறார் போல!

மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான் மதச்சார்பின்மையின் இலக்கணம்!

மத அடிப்படைவாதம் எதிர்க்கப் படவேண்டுமாம்...ஒருவன் தனது மதத்தில் அடிப்படைவாதியாக அந்த கொள்கைகளில் தீவிரமாக இருப்பதில் என்னதவறு..மதத்தின் பெயரால் யார் பிற சமயத்திற்கு தொல்லை கொடுத்தாலும் வன்முறை ஏவினாலும்அது எதிர்க்கப்படவேண்டியது என்றால் அது நியாயமான கருத்தாக இருக்கும்.இங்கே மதத்தின் சட்டதிட்டங்களை ஒழுகி வாழ்பர்களை கெட்டவர்களாக சித்தரிக்க மதஅடிப்படைவாதி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

சரி இது இருக்கட்டும், ஏகத்துவ வாதிகளை வஹாபியிசத்தோடு வலிய இணைத்து குழம்பிப்போகிறார் கட்டுரையாளர் சமஸ். தௌஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுக்கும் வஹாபியிசதிற்கும் என்னசம்மந்தம்?
''1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது; வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது; முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது'' என்கிறார் கட்டுரையாளர் சமஸ்.

இருந்து விட்டுபோகட்டும் அதெற்கென்ன இப்போது? இவரோடு தௌஹீத்வாதிகளை ஏன் தொடர்பு படுத்தவேண்டும்? அவரை முன்மாதிரியாக எற்றுக் கொண்டிருக்கிறார்களா தௌஹீத் வாதிகள்? இவரது பெயரே தவ்ஹீத் சிந்தனையை ஏற்றுக்கொண்டிருக்கும் 99% பேருக்கு தெரியாதே!
மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவருக்கு காரல்மார்க்சை தெரியும், பெரியாரிசத்தை ஏற்றுக்கொண்டவருக்கு பெரியார் ஈ.வே.ரா வைத் தெரிந்திருக்க வேண்டும். அம்பேத்கரிசத்தை அறிந்தவர்களுக்கு அவரை புரிந்திருக்க வேண்டும். இதுதான் ஒருவரின் கொள்கையை பின்பற்றுபவர்களின் அடிப்படை.
இந்த வகையில் தௌஹீத் வாதிகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத்தான் பின்பற்றுகிறார்கள். அப்படியானால் தௌஹீத்வாதிகளை முஹம்மதிசத்தை பின்பற்றுபவர்கள் என்று சொல்வதே அறிவார்ந்தவர்களின் செயலாக இருக்கமுடியும்.

இந்த அறிவு சமசுக்கு இருப்பதாக நேர்மறையாகவே நம்புவோம். ஆனாலும் அவர் வஹாபியிசத்திற்கும் தௌஹீத்வாதிகளுக்கும் முடிச்சு போடுவது தௌஹீத்வாதிகள் வன்முறையாளர்கள்;சமய சகிப்பற்றவர்கள், மதவெறியர்கள் என்பதுபோன்ற சித்திரத்தை உருவாக்கத்தான்!

இது தவிர, '' இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்'' என்று மனிதஉரிமைஅமைப்புகள் சொல்வதாக போகிற போக்கில் ஒரு செய்தியை பதிவு செய்கிறார் சமஸ். இதற்கு எந்த புள்ளிவிபரமும் இல்லை; எந்த காலகட்டத்தில்இவை நடந்தது என்ற ஆதாரம்இல்லை.ஒருவாதத்திற்கு இதுஉண்மையாக வைத்துக் கொண்டாலும் இவர் விமர்சிக்க ஷிர்க் மாநாடு, தவ்ஹீத் முதலானவற்றுக்கும் இதற்கும்என்னதொடர்பு.?
ஆயினும், வஹாபியிசம் சௌதிஅரேபியாவிலிருந்து துவங்கியது என்பதற்காக இங்கே இதைபதிவு செய்து தௌஹீத் வாதிகளை டேமேஜ் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான்!

(இந்த கட்டுரையாளரின் ஒட்டுமொத்த கருத்துக்களும் வரிக்கு வரி அபத்தம் நிறைந்தவையாக இருக்கின்றன. விரிவஞ்சி அக்கட்டுரையின் அவதூறான ஆபத்தான பகுதியைமட்டும் இங்கே விமர்சிதிருக்கிறோம்... கட்டுரையாளர் சமஸ் இது குறித்து ஆரோக்கியமான விவாதத்திற்கு முன்வருவாரேயானால் அவரது கருத்துக்கள் எப்படியெல்லாம் முட்டாள்தனமாக வெளிப்படுகின்றன; அவரது தவறான புரிதல் அல்லது சித்தரிப்பு எதனால் என்பது குறித்தெல்லாம் இன்ஷாஅல்லாஹ் அவருக்கு புரியவைக்க தயாராக இருக்கிறோம்!)

நன்றி

அபூ பைசல்
(மக்கள் ரிப்போட்டர் ஆசிரியர்)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)