முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மல்லிப்பட்டினம் கலவரத்தின் புதிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. மறுமலர்ச்சி த.மு.மு.க அமைப்பாளர் குற்றச்சாட்டு.







முத்துப்பேட்டை, ஏப்ரல் 21: முத்துப்பேட்டைக்கு நேற்று மல்லிப்பட்டினம் கலவர பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆப்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 14 –ம் தேதி அன்று தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் பா.ஜ.க வன்முறையில் ஈடுப்பட்டது. இது குறித்து மறுநாள் 15-ம் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவிண் குமாரை சந்தித்து முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளதையும், அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இதற்கு காரணமான பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், அவரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தோம். 

மறுநாள் 16-ம் தேதி காவல் துறை தலைவர் அனூஸ் மிஸ்ராவை சந்தித்தும் மனு கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் வேலும் பல உன்மைகளை கண்டறிய இன்று(20-ம் தேதி) மல்லிப்பட்டினம் சென்று கலவர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அங்கு முஸ்லிம்களின் பெட்ரோல் பங்கு, மீன்பிடி போட்டுகள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் ஏகப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாகி உள்ளன. இதில் 1.5 கோடிக்கு மேல் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளன. 

அதற்காக அரசு இதுநாள் வரை எந்த வித ஒரு ரூபாய் கூட நிவாரனம் வழங்கப்படவில்லை, உயர் அதிகாரிகளும் கலவர பகுதியை பார்வையிட வில்லை, ஒரு வார காலமாகியும் எந்தவித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை, முஸ்லிம்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை நீதி கிடைக்கவில்லை, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை இன்று வரை குற்றவாளிகளை தேடுகிறோம் என்ற பேரில் காவல் துறை துன்புறுத்தி வருகிறது, அவர்களுக்கு உரிய நியாயம் வேண்டும், உரிய நிவாரனமும் வேண்டும். இது குறித்து நாளை 21-ம் தேதி(இன்று) சென்னையில் டி.ஜி.பியை சந்தித்து புகார் கொடுக்க இருக்கிறோம்.

 மேலும் அவரிடம் எங்களுக்கு கிடைத்த கலவரம் தொடர்பான புதிய வீடியோ ஆதாரங்களையும், காவல் துறை துணையோடு நடந்த வண்முறை ஆட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களையும் கொடுக்க இருக்கிறோம். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 30 பேர்களில் 22 பேர் அப்பாவி முஸ்லிம்கள் அவர்களை நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும், சட்டரீதியான நடவடிக்கையில் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் தலைமை செயலகத்தையும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முஸ்லிம் அமைப்புகளை ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வயிலாக எதிர்ப்பை காட்டுவோம். இவ்வாறு ஜெய்னுல் ஆப்தீன் கூறினார். பேட்டியின் போது மாநில ஒருங்கினைப்பாளர்கள் பாட்சா, காரைக்கால் யூசுப், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகி  முஹம்மது இலியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.


நமது நிருபர் 

AKL. அப்துல் ரஹ்மான்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)