முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தி.மு.க.வுடன் கூட்டணி கருணாநிதியுடன் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை, ஜனவரி 18: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.


கருணாநிதியுடன் சந்திப்பு
கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ரிபாயி, பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. தரப்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் உடன் இருந்தனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 12.30 மணி வரை நீடித்தது.
தி.மு.க.வுக்கு ஆதரவு
பின்னர், வெளியே வந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ரிபாயி, பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
கடந்த 10–ந் தேதி சென்னையில் நடைபெற்ற எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதை முறையாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கூறினோம்.
தொகுதி பங்கீடு பற்றியும் பேசியுள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்ட பிறகு கூட்டணி தலைவர் கருணாநிதி அறிவிப்பார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வும் வர வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். மத்தியில் மதசார்பற்ற கட்சி ஆட்சியமைக்க வேண்டும். ராஜ்யசபா தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)