முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி மீது பொய் வழக்கு போட்ட இராமநாதபுர துணை ஆய்வாளர் இந்திரா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -தமுமுக தலைமையகம் அறிவிப்பு !!

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டதோடு மட்டுமின்றி, கொச்சையாக இழிவுபடுத்திப் பேசிய இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளர் இந்திராவைக் கண்டித்தும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவண்

தமுமுக தலைமையகம்

பாப்புலர் பிரண்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் சன் டிவியிலிருந்து நீக்கப்பட்டார் வீர பாண்டியன் -சன் டிவியின் மதவாத போக்கை கண்டிக்குமா ஊடகங்கள் ?




சென்னை, ஜனவரி 01:  உங்கள் முன்னால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிக பிரமாண்டமாக ஒரு நரேந்திர மோடி என்கிற ஒரு பலூன் நின்றுகொண்டிருக்கிறது. அதை,ஒற்றுமை என்ற சின்ன ஊசி எடுத்து குத்தி உடைக்க வேண்டும்.இந்த பலூனை நீங்கள் உடைக்க வில்லையென்றால்... நண்பர்களே ஒருவேளை,மோடி வந்து இந்தியாவில் உட்கார்ந்து விட்டால்,ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு அந்த கும்பலை நீங்கள் அரியாசனத்தை விட்டு இறக்கவே முடியாது!இதை நான் உங்களை அச்சப்படுத்த சொல்லவில்லை..நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' -இந்த ரீதியில் பேசிய தோழர் சண் டி.வி வீர பாண்டியன்,





நான் எந்த இயக்கத்தையும் சாராதவன்.ஊடகம் தான் எனது இயக்கம்.எனது நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் வருகிறார்கள்;எனக்கு தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு.அது வேறு விஷயம்;ஆனாலும்,நீங்கள் சார்ந்திருக்கிற (முஸ்லிம்)சமூகம் என்ன கருதுகிறது;என்ன செய்ய வேண்டும்?உங்கள் முன் இருக்கும் கடமை என்ன என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



இந்தியாவில்,குறிப்பாக தமிழகத்தில்,முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இருக்கின்ற பலவீனமாக நான் கருதுவது ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாதது தான். 

முஸ்லிம்களிடம் வலிமையான ஊடகங்கள் இல்லை;முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை குறித்த செய்திகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த முஸ்லிம்கள் ஊடகத்துறையில் பங்கெடுப்பது அவசியம்;என்றெல்லாம் எஸ்.டி.பி,ஐ கட்சி சென்னையில் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய பேச்சுக்களுக்காக சங்க பரிவாரம் அவர் மீது நாலாபுறங்களிலுமிருந்து தாக்குதல்களை துவங்கி இருக்கிறது.


கருத்தை கருத்து தளத்தில் எதிர்கொள்ளாமல்,அவரை நோக்கி ஆபாச அர்ச்சனைகளையும் துவங்கி இருக்கின்றன சங் கும்பல்.பொதுவாக முஸ்லிம் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும்,அனைத்து தரப்பினரிடமும் இயல்பாக பழகக்கூடியவர் தோழர்.வீர பாண்டியன்.தமிழ்அமைப்புகள்,இடதுசாரிகள்,சமூகவியலாளர்கள்,பி.ஜே.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்பினர்,பத்திரிகையாளர்கள் என அனைவரோடும் எந்த வேறுபாடும் பாராமல் நட்பு பாராட்டுபவர்.தான் இன்ன சமூகத்தின் ஆதரவாளன் என்கிற வண்ணப்பூச்சுக்கு உட்படுத்திக்கொள்வதை தவிர்த்து வருபவர்.இவை அவர் சண் டி.வி.யில் அவர் நடத்தும் நிகழ்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது;தமது நடுநிலை தன்மை சந்தேகத்திற்குள்லாகிவிடக்கூடாது என்பதில் அவர் எடுக்கும் கவனம் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.இதை புரிந்தவர்கள் தான் தமிழக ஹிந்துத்துவா அமைப்பினரும்.ஆயினும்,அவர் முஸ்லிம்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தியதையும்,மோடியை பற்றி விமர்சனம் செய்ததையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் மீது பாய்ந்து பிறாண்டுகிறார்கள்.



சண் டி.வி நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள சங் கும்பல் அந்த டி.வி நிர்வாகத்தை சந்தித்து,வீர வீர பாண்டியனை நீக்கவில்லையென்றால்,சன் டி.வி நிகழ்ச்சிகளில் ஹிந்துத்துவாக்கள் யாரும் பங்கெடுக்க மாட்டார்கள் என அந்த நிர்வாகத்தை நிர்பந்தப்படுத்தியுள்ள செய்தி,ஹிந்துத்துவாவினரின் சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கு சான்று மட்டுமல்ல அவர்களின் வெறித்தனத்திற்கும்,குரூர சிந்தனைக்கும் சான்றுகள் தான்.

சண் டி.வி நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று வந்தவர் யார் தெரியுமா? தோழர் வீர பாண்டியன் நடத்தும் நிகழ்ச்சிக்கு, தோழர்.வீர பாண்டியனால்-முஸ்லிம்களைவிட,இடது சாரிகளை விட,காங்கிரஸ் காரர்களை விட சமூகவியலாலர்களை விட,மனித உரிமை ஆர்வலர்களை விட அதிகமாக அழைக்கப்படும் ப.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.டி.ராகவன் தான்.(இது குறித்து நேரடியாகவே தோழர் வீர பாண்டியனிடம் நான் விமர்சனம் வைத்திருக்கிறேன்.)நிகழ்ச்சி முடிந்த பின்பும், இயல்பாக ராகவனிடம் பேசிக்கொண்டிருப்பார் வீர பாண்டியன்.அந்த ராகவன் தான் இன்று இவருக்கு எதிரான கும்பலுக்கு தலைமை தாங்கி வந்திருக்கிறார்.
இந்த விஷயத்தில் முஸ்லிம் அமைப்புகள் உள்பட பல தரப்புகள் மீது வருத்தம் ஏற்படுகிறது.ஒரு ஊடகவியலாளர் பகிரங்கமாக மிரட்டப்பட்டிருக்கிறார்,அவரை பனி நீக்கம் செய்யவேண்டும் என நிர்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது;ஆபாச தொலைபேசி தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கிறது; கருத்து சுதந்திரம்,ஜனநாயகத்தன்மை மீதெல்லாம் தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கிறது ஆயினும் ஊடகங்கள் 'நமக்கென்ன' என அசாத்திய அமைதி காக்கின்றன. 


இடது சாரிகளோ,தமிழ் அமைப்புகளோ,இஸ்லாமிய அமைப்புகளோ உரிய வகையில் இதை கண்டிக்க முன் வரவில்லை.

கவுண்டர் ஆச்ஷனாக,ஹிந்துத்துவாவினரின் நெருக்கடிக்கு பணிந்து வீர பாண்டியனின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யும் நிலை வந்தால்,ஹிந்துத்துவாவினர் கலந்து கொள்ளும் நிகழ்சிகள் மட்டுமல்ல;சன் டி.வியின் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கூட நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று அறிவிக்க வேண்டியவர்கள் மௌனம் காக்கிறார்கள்;அவ்வளவு கூட வேண்டாம்,குறைந்த பட்சம் ஒரு கன்னடன அறிக்கை கூட வெளியிடவில்லையே.முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே கருத்து சுதந்திரம் பேசும் எழுத்தாளர்கள்/கவிஞர்கள் கூட்டமைப்பு எல்லாம் எங்கே போயின ? குறிப்பிடும் படியாக,இந்த விஷயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க வில்லையே ஏன்?இதை நாம் கண்டித்துதானே ஆகவேண்டும்?.


முஸ்லிம்கள் விஷயத்தில் கருத்து சுதந்திரம்,படைப்பு சுதந்திரம்,புடலங்காய் என்றெல்லாம் கொந்தளிக்கும் ஊடகங்கள், சக ஊடகவியலாளரின் கருத்து சுதந்திரம் மீதும்,ஜனநாயக உரிமை மீதும் பட்டவர்த்தனமாக தாக்குதல் நடந்ததை மெளனமாக அங்கீகரிப்பது ஊடகங்களின் கமர்ஷியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி என்பதா?நாங்களும் காவிக்கு மாறிட்டோம் என்று சொல்வதாக எடுத்துக்கொள்வதா? 



எதுவாக இருந்தாலும் 'நெருக்கடி கொடுக்க எங்களுக்கும் தெரியும்' என்பதை இடது சாரிகள்,தமிழ் அமைப்புகள், ஏனைய பிற அமைப்புகளைக் காட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் காட்டியிருக்க வேண்டிய தருணம் அது !

இஸ்லாத்தை ஏற்க துடிக்கும் யுவன்சங்கர் ராஜா -எத்தி வைக்குமா இஸ்லாமிய அமைப்புக்கள் ?

சென்னை, ஜனவரி 01: இசையே கோவில்… இன்ஸ்ட்ரூமென்டுகளே  தெய்வம்…! எல்லா இசையமைப் பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா என்றாலும், அதையும் தாண்டி அவர்களை இயக்குவது ஏதோ ஒன்று. அதைதான் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொழுது கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை சரணாகதியடைய வைக்கிற அந்த சக்தியை விட அதற்கான நெருக்கடிதான் மிக மிக முக்கியமானது.   இந்த நெருக்கடிக்கு ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் ‘மன அமைதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.   யுவனும் அப்படியே.
மன அமைதியை தேடிய யுவனுக்கு அந்த இஸ்லாமே சிறந்த அமைதியை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில திரையுலக நண்பர்கள். பரபரப்பான இந்த விஷயத்தை முதன்முதலில் நாட்டுக்கு தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது  நமது   நியூதமிழ்சினிமா.காம்.   அதற்கு முன் யுவன் பற்றி….
மிக இளம் வயதிலேயே இசைஞானியின் பெயரை காப்பாற்றப் போகும் வாரிசு இவர்தான் என்று அடையாளம் காணப்பட்டவர் யுவன். வெஸ்டர்ன் இசை என்றாலும் சரி, அப்பாவை போல கிராமிய இசை என்றாலும் சரி. யுவனுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம் என்கிற அளவுக்கு மனதை மயக்கிவிடுகிற வல்லமை வந்தது. இசையில் கொடிகட்டி பறந்தார் யுவன். நிற்க நேரமில்லாமல் உறங்க நேரமில்லாமல் எந்நேரமும் இசை ஒலித்துக் கொண்டிருந்தது அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்.
இந்த நேரத்தில்தான் எல்லா வாலிபர்களுக்கும் வருவதை போல அவருக்கும் அது வந்தது… காதல்!  மகனின் சந்தோஷமே நமது சந்தோஷம் என்று கருதிய அப்பா இசைஞானி எவ்வித முணுமுணுப்பும் காட்டாமல் சம்மதம் தெரிவிக்க, சந்தோஷமாக இல்லறத்தில் அடியெடுத்து வைத்தார் அவர்.
இந்த பந்தம் நெடுநாட்கள் நிலைக்காமல் போனது பூர்வ ஜென்ம பூஜ்யமா, அல்லது நிகழ்கால ஜோசியமா தெரியாது. இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதற்கப்புறம் தனிமை யுவன்சங்கர்ராஜாவை கவலைப் படுகுழியில் தள்ளவில்லை. மிக மிக உற்சாகமாகதான் இருந்தார். மீண்டும் ஒரு காதல் முளைக்கக் கூடாது என்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா? முளைத்தது.
இந்த முறை ஊரை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் யுவன். இந்த நேரத்தில் மிக கசப்பான அதே நேரத்தில் துடிப்பான உண்மையை சொல்ல வேண்டும். ஜோதிடம் பொய் என்பவர்கள் கூட சிலரது குடும்ப வாழ்க்கையும் அவர்கள் படுகிற பாட்டையும் பார்த்தால், அட ஈஸ்வரா என்று கவலை கொள்வார்கள்.
யுவனுக்கும் திருமண கட்டத்தில் எந்த பூதம் வந்து அமர்ந்திருக்கிறதோ, தெரியவில்லை. இந்த திருமணத்திலும் சிக்கலாம். அவரது இரண்டாவது மனைவியையும் அவர் பிரிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு அருகில் இல்லாவிட்டாலும் அவரை நோட்டமிடுகிற சினிமாக்காரர்கள்.
இதில்தான் அதிகம் உடைந்தாராம் யுவன். இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு இசையோடு பயணித்துக் கொண்டிருந்தார். அன்பான அம்மா இருந்தார்கள் அவருக்கு. எந்த நேரத்தில் அவர் வந்தாலும் பாசத்தோடு அரவணைத்துக் கொள்கிற அளவுக்கு ராஜாவின் இல்லம் இருந்தது.
அதற்கும் கொடுத்து வைக்கவில்லை யுவனுக்கு. அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது.
நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர்.   மனமே அமைதி கொள்… என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது?
இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர், இஸ்லாமியர்களின் வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்து  ‘இதை படி. மனம் அமைதியடையும்’ என்றாராம். உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன். மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை.  மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன்.
ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்…. அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு.
இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன்.
அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். எதுவாக இருப்பினும் நல்லதே. யுவன் எந்த மதத்திலிருந்தாலும், அவரது இசை எல்லா மதத்தினர் மத்தியிலும் இருக்கும். அது போதும்!

மௌத்து அறிவிப்பு "ஹபீப் கனி "


முத்துப்பேட்டை, ஜனவரி 01: கிட்டங்கித் தெரு மர்ஹூம் முஹம்மது ஷேக் அலி அவர்களின் மகளும்,  மர்ஹூம்  முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கொடை கமால் அவர்களின் மாமியாரும்,  முஹம்மது இக்பால், ஜப்பார் இவர்களின் தாயாருமான ஹபீப்கனி அவர்கள்   இன்று அதிகாலை 2 மணியளவில்   மௌத்தாகிவிட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின்   ஜனாஸா   இன்று ( 1.1.14  புதன்கிழமை)  காலை 10 மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.  

நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துபேட்டையில் பொது மக்களை கவர்ந்த குரங்கு !மீன் வியாபாரிக்கு உதவி செய்யும் மனிதநேயம் !!!

முத்துப்பேட்டை, ஜனவரி 01: முத்துப்பேட்டை  பேட்டை   கிராமத்தில்   உள்ள மீன் அங்காடியில்  ஒரு   குரங்கு   7 மணிக்கு மீன் அங்காடிக்கு வந்து அங்கு மீன் வியாபாரம் செய்யும்  நாடாவி  என்பவருக்கு  உதவி செய்து வருகிறது.சில நேரங்களில்  மீன்   வியாபாரமும்   செய்கிறது. மீனை பைகளில் எடுத்து போடுவது,  பணத்தை வாங்கி போடுவது,   மீனை சுத்தம் செய்வது   போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதாக அதனை பணிக்கு வைத்து கொண்டு இருக்கும் நாடவி
பெருமிதத்தோடு சொல்கிறார்.
1525761_243295539167737_1517306265_n
அது யாருக்கும் தொந்தரவு கொடுப்பது இல்லை.   வியாபாரம் முடிந்ததும் நான் வீட்டுக்கு புறப்பட்டு விடுவேன்.    அது காட்டுக்கு புறப்பட்டு விடும்.   மறு நாள் தான் எங்களின் சந்திப்பு நிகழும்  என்று   கூறுகிறார்.   எங்களின் உறவு என்பது  தொழில் சம்பந்த பட்டது மட்டுமே என்பதுடன் மனிதனை விட எனக்கு குரங்கு மேலானது  என்று அதன் மீது எனக்கு அதீத பிரியம்  என சொல்லி சிரிக்கிறார் நாடாவி.

துபாயில் நிறைவேறிய புத்தாண்டு கின்னஸ் சாதனை வீடியோ, மற்றும் புகைப்படங்கள் இணைப்பு.











துபாய், ஜனவரி 01: அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம்  ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனை மிஞ்சும் அளவுக்கு,  ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000  வெடிகளை வெடித்தனர். இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தப்பட்டது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவிலும் இந்த வானவேடிக்கை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான அமீரக வாழ் பொதுமக்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா வாசிகளும் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். 
 
நமது நிருபர்:

AKL. அப்துல் ரஹ்மான்.BBA, 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)