முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மோடியின் தமிழக வருகையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகை போராட்டம்...



திருச்சி செப்டம்பர் 14: இன்று திருச்சியில் நடைபெற்று வரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழுவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வருகிற 26-09-2013 அன்று திருச்சியில் நடைபெறும் பாஜக மாநாட்டிற்கு வருகைதருகின்ற, குஜராத் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற இனக்கலவரத்திற்கு காரணமான நரேந்திர மோடியை கண்டித்து கறுப்பு கொடி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அனைவரும் அணிதிரள்வோம் செப்டம்பர் 26-ல் திருச்சியை நோக்கி என அழைப்பு விடுத்துள்ளது எஸ்,டி.பி.ஐ கட்சி

மதுக்கூரில் தொடர்ந்து பதற்றம்...



மதுக்கூர், செப்டம்பர் 14: மதுக்கூரில் விரும்பதகாத சம்பவங்கள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகின்றது. இன்று 14/09/2013 சனிக்கிழமை காலை வழக்கப்போல் பெரியப் பள்ளிவாசலின் முஅத்தீன் சம்சுதீன் அவர்கள் பஜர் பாங்கு சொல்ல பள்ளிவாசல் வந்துள்ளார். பெரியப் பள்ளிவாசலில் ராத்தீபு இடம் என கூறப்படும் பள்ளிவாசலின் மையப்பகுதியில் யாரே விஷமிகள் மாட்டு சணத்தை ஒரு வாளியிலும்,பிளாஸ்டிக் பையிலும் கொண்டுவந்து கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.உடனே நிர்வாகத்தினருக்கு தகவலும் கொடுத்துள்ளார்.ஜமாத் மற்றும் சங்கங்களில் நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு வந்து பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பிறகு புகார் செய்யலாம் என ஜமாத்தார்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்.ஆனால் புகார் செய்யவில்லை.சம்பவம் அறிந்த சமுதாய இயக்க சகோதரர்களும் சமுதாய நலன் விரும்பிகளும் பள்ளிவாசலில் குவிந்தனர்.


மீண்டும் பள்ளிவாசலில் கூடிய ஜமாத் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரின் விருப்பத்தின்பெயரில் காவல் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று காவல்துறை ஆய்வாளர் மனோகரன் அவர்களிடம் புகார் செய்தனர்.

மதுக்கூரில் உள்ள பள்ளிவாசலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுக்கூரில் ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவுகின்றது

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)