முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கணவரை போலீசார் கைது செய்ததால், தஞ்சாவூரை சேர்ந்த பெண் 3 குழந்தைகளுடன் ஷார்ஜாவில் தவிப்பு:


ஷார்ஜா, செப்டம்பர் 04: ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வந்த சுதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்து விட்டதால் அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளார்.தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீஷ். இவர் நம்பர் பிளேட் வாங்கிய நிறுவனத்தில் கொடுத்த செக்யூரிட்டி செக்கை வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.

கணவர் கைதாகி விட்டதால் அவரது மனைவி சுந்தரி தனது 3 குழந்தைகளுடன் நடுரோட்டில் விடப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியிலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலும் அவர் தவித்து வருகிறார். இவரது மூத்த மகள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் நன்றாக படித்து வருவதால் பள்ளி நிர்வாகமே இவரது கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகிறது.உணவுக்காக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவி செய்து வருகின்றனர். 

இந்தப் பெண்ணுக்கு உணவுப் பொருட்களோ அல்லது பிற உதவிகளோ செய்ய விரும்புவோர் 055 524 8000 / 055 53 89 276 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவிடலாம்.

மதுரை சுங்கம் பள்ளிவாசலில் கேமரா: அதிருப்தியில் ஜமாத் உறுப்பினர்கள்.!!!



மதுரை, செப்டம்பர் 04: மதுரையில் உள்ள பிரபலமான சுங்கம் பள்ளி வாசல் வளாகத்திற்குள் 12 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

போலீஸாரின் ஆலோசனைப்படி இந்த பள்ளிவாசலுக்குள் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், முஸ்லீம் ஐக்கிய ஜமாத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் ஆகியவை இந்த கேமரா பொருத்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் முஸ்லீம் சமுதாயத்தினரிடையே கருத்து பிளவு ஏற்பட்டுள்ளது.

*இந்த செய்தியை ஆகஸ்ட் 16 தேதியிட்ட ஒரு சில நாளிதழ்களும்,இணையதளங்களும் வெளியிட்டிருந்தன.

வழிபாட்டு தளங்களில் கண்காணிப்பு காமெரா பொருத்தவேண்டும் என்பது காவல்துறையின் வாய்மொழி உத்தரவுதான். அப்படியே பொறுத்தவேண்டும் என்றாலும் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பொருத்தவேண்டும் என காவல்துறை அறிவுறுத்த வேண்டும். இதை கூட காவல்துறை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பள்ளிவாசலில் மட்டும் பொறுத்த வேண்டும் என்பது உள்நோக்கம் கொண்டதும் ஒரு சமுதாயத்தை அவமதிப்பதும் ஆகும்.

நெல்லை மேலப்பாளையம், மதுரை நெல்பேட்டை ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது காவல்துறை நிகழ்த்தி வரும் வரம்பு மீறல் நடவடிக்கைகள் குறித்த உண்மை நிலையை அறிய மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தைச் சேர்ந்த பேரா.அ.மார்க்ஸ் தலைமையில் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் குழு மதுரையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, மதுரை காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தது.

இதில் பேசிய பேரா.மார்க்ஸ், ''போலீசாரின் (மறைமுக) உத்தரவின் பேரில் முஸ்லிம் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டிருப்பதாக உள்ளூர் முஸ்லிம்கள் கூறுகின்றனர். இப்படி சிவில் சமூக மக்களின் (அன்றாட) வாழ்க்கையை கண்காணிப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும்'' எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம்களை குற்றப்பரம்பரை போல் சித்தரிக்கும் போக்கை காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்.எங்கேனும் பள்ளிவாசல்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் படி காவல்துறை கட்டாயப்படுத்தினால் சம்மந்தப்பட்ட ஜமாத்துகள் நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுக்க தயங்கக்கூடாது.
காவல்துறை இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம்.

நன்றி: INTJ  

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் குறித்த INTJ வின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி அவர்களின் பேட்டி.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் ஊர்வலத்திற்கு முன் செல்லும் பிரசார வாகனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் கேட்டுக் கொண்டுள்ளது. முத்துப்பேட்டையில் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:  

முத்துப்பேட்டையில் வரும் 7 ஆம் தேதி பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வருடந்தோறும் நடைபெறும் இந்த விநாயகர் ஊர்வலத்தில் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய தவ்ஹீத் ஜமாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் முடிவில், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விநாயகர் பாதையை மாற்றம் செய்ய உத்தரவிட்டது.

 அதன்படி மாற்றுப்பாதையில் ஊர்வலம் சென்று வந்த நிலையில் சில கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. இருப்பினும் தொடர்ந்து நடைபெறும் விநாயகர் ஊர்வலமும், ஊர்வலத்திற்கு முன் செல்லும் வாகன பிரசாரமும், இன உணர்வுகளை தூண்டும் விதமாகவும், ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. அதனை தடை செய்ய வேண்டும். மேலும், முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கக்கூடிய பகுதிக்குள் வரும்போது, கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால்தான் இப்பகுதியில் பதற்றம் ஏற்படுகிறது. இன உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் அமைதியை நிலை நாட்டி சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். 

சாதி, மத ஊர்வலங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பின்பற்றி உத்திரபிரதேச மாநிலத்திலும் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசை பின்பற்ற அனைத்து மத ஊர்வலங்களை தமிழகத்திலும் தடை செய்வது குறித்து தமிக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். முத்துப்பேட்டையில் பெறும் எதிர்பார்ப்போடு நடக்க இருக்கும் ஊர்வலத்தை காவல்துறை எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் முடித்துத்தர வேண்டும் என்றார்.  

source from: www.muthupettaiexpress.com 


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)