முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி: துபாயில் கோலாகலம்...
















துபாய், ஜூலை 27: முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய 4-ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள அல் தவார் பார்க்கில் மிக கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நமதூரை சேர்ந்த நண்பர்கள் அபு தாபி, ஷார்ஜா, அஜ்மான், அலைன், ராசல் கைமா, உம்முல் குயிம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து முஹல்லா வாசிகளும், வெளியூர் வாசிகளும் தங்களுடைய சிரமத்தை பொருட் படுத்தாமல் இந்த நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி காட்டிட வேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் இப்தாரின் போது பழம் மற்றும் கனி வகைகள், ஜூஸ் வகைகள், சமூசா, நோன்பு கஞ்சி, ஆகியவைகள் வழங்கப்பட்டது. தொழுகைக்கு பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் இது போன்ற நிகழ்ச்சியை வருடம் வருடம்  நடத்த வேண்டும் என்றும், மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தான் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து நண்பர்களின் ஒற்றுமை ஓரணிக்கு வரும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியின் போது எதாவது சிறப்பு பயன்கள் ஏற்பாடு செய்திரிக்கலாம் என்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மூன் லைட் கிரிக்கெட் அணியினர், கடந்த நிகழ்சிகளில் அவ்வாறு செய்திருந்தோம் என்றும், இந்த நிகழ்ச்சியில் அனைத்து இயக்க சகோதரர்களும், அனைத்து சங்க சகோதரர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும் போது யாரையும் மனம் நோகும் படி செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் பயான் வைக்கவில்லை என்றும், மேலும் இவற்றை நாங்கள் நடுநிலையாக நடத்த வேண்டும் என்று கமிட்டி மூலம் முடிவு செய்து அமைதியான முறையில் நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

இது போன்ற நிகழ்ச்சியானது வருடம் வருடம் நடைபெற வேண்டும், இதற்காக வல்ல இறைவனிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பில் பிரார்த்திப்போம் என்றும், நமது வாசகர்களுக்கும் அவற்றை எடுத்துரைத்து துவா செய்ய வலியுருத்தும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ள:

K.M. Riyaz : 00971- 50 253 5563

Mohammed Mahadeer: 00971 - 50 427 7145

Shaik Dawood (Raja): 00971 - 52 901 0740

Thameem: 00971 - 50 496 2324


நேரடி களத்தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ்.
MBA., MA. (Journalism & Mass Communication)

மேலும் தொடர்புக்கு: public.mttexpress@gmail.com...



தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)