முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இந்திய பணக்காரவர்களின் கறுப்புப் பண விவகாரம், விக்கி லீக்ஸ் வெளியிட்டது.




இந்தியா, பிப்ரவரி 16:  ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே 

கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் 

வெளியிட்டு உள்ளது.

ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி

அர்சத்மேதா.................1,35,800 கோடி


லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி


ராஜீவ் காந்தி..................19,800 கோடி


கருணாநிதி....................35,000 கோடி


சிதம்பரம்.......................32,000 கோடி


சரத் பவார்.....................28,000 கோடி


கலாநிதி மாறன்...............15,000 கோடி


HD குமாரசாமி................14,500 கோடி


JM சிந்தியா......................9,000 கோடி


கேடன் பிரகாஷ்..................8,200 கோடி


A ராஜா...........................7,800 கோடி


சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி

மவுத்து அறிவிப்பு: "நபிஷா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 16: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு, சீத்தவாடி சந்து மர்ஹூம் அமீர் முகைதீன் அவர்களின் மனைவியும், கால்நடை மருத்துவர் M.S.முஹம்மது அலியார் அவர்களின் சகோதரியும், சுல்தான் அவர்களின் தாயாரும், அதிராம்பட்டினம் அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமாகிய நபிஷா அம்மாள் அவர்கள் 15.02.2013 காலை 7.00 மணியளவில் மெளத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா 15.02.2013 மாலை 4.00 மணியளவில் அரபு சாஹிபு பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அறிவிப்பவர்

சுல்தான்


நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்) 

முத்துப்பேட்டையில் ஆபத்தை உணராமல் கடலில் படகுகளை இயக்கும் சிறுவர்கள்..!





முத்துப்பேட்டை, பிப்ரவரி 16: முத்துப்பேட்டை கடல் பகுதி ஆசியாவிலேயே காணாத ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள லகூன் தீவுக்கு பெரிய வரலாறு உண்டு. இப்பகுதியில் அதிகளவில் கொடுவா, வெள்ளான், மடவா, இறால் போன்ற மீன் வகைகள் அதிகளவில் கிடைப்பதால், இப்பகுதி மீன்களுக்கு தனி மவுசு உண்டு. முத்துப்பேட்டை சுற்றியுள்ள ஜாம்புவானோடை, செங்காங்காடு, முனாங்காடு, தில்லைவிளாகம், ஆசாத் நகர், பேட்டை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீன் பிடிக்க மோட்டார் படகுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

 ஒரு காலத்தில், பாய் மர படகுகள் மூலம் சென்று வரும் போது சுமார் 3 அல்லது 4 நாட்கள் ஆகும். தற்போது மோட்டார் படகு என்பதால் நள்ளிரவு போகும் மீனவர்கள் அதிகாலை வந்து விடுவதால் மீன் உயிருடன் மார்கெட்டில் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீனவர்களுக்கு துணையாக அவர்களின் குழந்தைகள் சிறுவர்கள் உதவி செய்யும் வேலையில் வலைகளை சீர்படுத்துவது, படகுகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை கவனிப்பது உண்டு. இது நாளடைவில் படகுகளை சிறுவர்களே இயக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சில குறும்புக்கார சிறுவர்கள் தனது நண்பர்களுடன் படகுகளை இயக்கி கும்மாளம் அடிப்பதும், வேகமாக போட்டி போட்டு ஒட்டுவதும் இது வாடிக்கையாக மாறி விட்டது. இதனை காணும் சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சியில் பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

 மேலும், அலம் என்னும் கடல் முகத்துவாரத்துக்கு முன் உள்ள பகுதி சேறுபகுதி என்பதால் சிறுவர்களின் படகில் அடிக்கும் லூட்டியால் அந்த பகுதி சேறுகுளப்பாகி காட்சியளிப்பதால் மற்ற படகுகள் செல்ல இடையூறு ஏற்படுவதும், அப்படியே கவிழ்ந்தால் படகு சவாரி செய்யும் பயணிகள் சேற்றுக்குள் சிக்கி பலியாக வாய்ப்புகள் உள்ளன.  இது குறித்து, சுற்றுலா வந்த ஆசிரியர் தங்கபாபு மற்றும் நண்பர்கள் கூறியதாவது, சிறுவர்கள் படகுகளை இயக்குவது ஆச்சரியமாக இருந்தாலும் இது அவர்களது உயிரை உலை வைக்கும் செயலாக உள்ளது, இதனை காணும் என்னை போன்ற சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கலந்து பயணமாக உள்ளது. இதனை அரசு தடுக்க வேண்டும்.

என்றார். இப்படி சிறுவர்களின் சுட்டி குறும்பால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த செயலை அரசு தடுக்க முன் வருமா..? அல்லது எதையுமே விபத்துகள் சம்பவங்கள் நடந்த பிறகு தான் யோசிக்கும் அரசு இதிலும் அப்படி தான் நடந்து கொள்ளுமா..? என கூறிகிறார்கள் அப்பகுதி மக்கள்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)