முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சென்னையில் கூடியது இஸ்லாமிய இஜ்திமா மாநாடு :லட்சகணக்கானோர் பங்கேற்பு :

சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் பகுதியில் உள்ளது அலமாதி எனும் கிராமம் .இங்கு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இஸ்லாமிய இஜ்திமா மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர் .இதற்காக பிரம்மாண்டமான முறையில் பல விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட
 ராட்சத பந்தல்கள் போடப்பட்டு அதில் சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள்    மற்றும்  ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன .மைதானத்தின் உள்ளே உளு செய்வதற்காக கிரேன் மூலம் பள்ளங்கள் வெட்டப்பட்டு 4 இடங்களில் மிக நீளமான அஹல்கள் அமைக்கப்பட்டிருந்தன .உளு செய்வதற்காக மிக நீளமான பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய தண்ணீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன . சிறுநீர் கழிப்பதற்கு வசதியாகவும்   ,மலம் கழிப்பதற்கு வசதியாகவும் தனித்தனியே பிளாஸ்டிக்கிலான ரெடிமேடு பாத்ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன . 10 க்கும் மேற்பட்ட உணவகங்கள் அமைக்கப்பட்டு அதில் ஊர்வாரியாக  பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது .உணவு டோகண் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக உணவை வாங்கிச்சென்று ,சாப்பிடுவதர்காக அமைகப்படிருந்த  விஷேச பந்தலில் அமர்ந்து உணவருந்தினார்கள் .இதுதவிர பல சிற்றுண்டிகடைகளும் நீண்ட வரிசையில் அமைக்கப்படிருந்தன.
தற்காக தமிழக அரசின் சார்பில் 500 க்கும் மேற்பட்ட அரசு  பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன  ,பேருந்துகள் அனைத்தும் மைதானத்தின் உள்ளே அணிவகுத்து  நின்றன . .ஒவ்வொரு பிரிவிற்கும் பொருப்புதாரிகள்  நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன .இந்த இஜ்திமா மாநாட்டில்  சிறப்பு பயான் செய்வதற்காக டெல்லி பேஷ் இமாம் ,மற்றும் ஹைதராபாத் ,பெங்களுரு  ,போன்ற பகுதிகளிலிருந்து இமாம்கள் ,மௌலவிகள் ,உலமாக்கள் ,ஆலிம்கள்  வந்திருந்தனர் .மாநாட்டு திடலை மத்திய உளவுத்துறையின் ஹெலிகாப்டர் வட்டமிட்ட வண்ணம்  இருந்தது .ஒரு சிறிய விளம்பரம் கூட இல்லாமல் அதுவும் சென்னை ,காஞ்சிபுரம்  ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டுமே கலந்துகொண்ட  இந்த இஜ்திமா மாநாட்டில் எப்படி இத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டதை பார்த்த  அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துபோனார்கள் .குறிப்பாக  தமிழக  மற்றும் அகில இந்திய அரசியல் வாதிகளின் புருவத்தை உயர்த்தசெய்துள்ளது .அல்லாஹு அக்பர்  ..அல்லாஹு அக்பர் ..அல்லாஹு அக்பர் ....

நேரடி களதொகுப்பு :ஜே.ஷேக்பரீத்  

தர்ஹா ss பாக்கர் அலி இல்ல திருமணம் :







 முத்துப்பேட்டை,பிப்ரவரி 15: S.S. பாக்கர் அலி அவர்களின் செல்வப்புதல்வனுமாகிய தீன்குலச்செல்வன் S.S.B. சபியுல்லா  மணமகனுக்கும், J. சாதிக் பாட்சா லெப்பை அவர்களின் செல்வப்புதல்வியுமான தீன்குலச்செல்வி S. ஜீமைரா சித்தீகா மணமகளுக்கும் நிக்காஹ் முத்துப்பேட்டை தர்ஹா அலங்கார வாசலில் அனைத்து ஜமாத்தார்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய பணக்காரவர்களின் கறுப்புப் பண விவகாரம், விக்கி லீக்ஸ் வெளியிட்டது.




இந்தியா, பிப்ரவரி 16:  ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே 

கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் 

வெளியிட்டு உள்ளது.

ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி

அர்சத்மேதா.................1,35,800 கோடி


லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி


ராஜீவ் காந்தி..................19,800 கோடி


கருணாநிதி....................35,000 கோடி


சிதம்பரம்.......................32,000 கோடி


சரத் பவார்.....................28,000 கோடி


கலாநிதி மாறன்...............15,000 கோடி


HD குமாரசாமி................14,500 கோடி


JM சிந்தியா......................9,000 கோடி


கேடன் பிரகாஷ்..................8,200 கோடி


A ராஜா...........................7,800 கோடி


சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி

மவுத்து அறிவிப்பு: "நபிஷா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 16: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு, சீத்தவாடி சந்து மர்ஹூம் அமீர் முகைதீன் அவர்களின் மனைவியும், கால்நடை மருத்துவர் M.S.முஹம்மது அலியார் அவர்களின் சகோதரியும், சுல்தான் அவர்களின் தாயாரும், அதிராம்பட்டினம் அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமாகிய நபிஷா அம்மாள் அவர்கள் 15.02.2013 காலை 7.00 மணியளவில் மெளத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா 15.02.2013 மாலை 4.00 மணியளவில் அரபு சாஹிபு பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அறிவிப்பவர்

சுல்தான்


நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்) 

முத்துப்பேட்டையில் ஆபத்தை உணராமல் கடலில் படகுகளை இயக்கும் சிறுவர்கள்..!





முத்துப்பேட்டை, பிப்ரவரி 16: முத்துப்பேட்டை கடல் பகுதி ஆசியாவிலேயே காணாத ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள லகூன் தீவுக்கு பெரிய வரலாறு உண்டு. இப்பகுதியில் அதிகளவில் கொடுவா, வெள்ளான், மடவா, இறால் போன்ற மீன் வகைகள் அதிகளவில் கிடைப்பதால், இப்பகுதி மீன்களுக்கு தனி மவுசு உண்டு. முத்துப்பேட்டை சுற்றியுள்ள ஜாம்புவானோடை, செங்காங்காடு, முனாங்காடு, தில்லைவிளாகம், ஆசாத் நகர், பேட்டை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீன் பிடிக்க மோட்டார் படகுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

 ஒரு காலத்தில், பாய் மர படகுகள் மூலம் சென்று வரும் போது சுமார் 3 அல்லது 4 நாட்கள் ஆகும். தற்போது மோட்டார் படகு என்பதால் நள்ளிரவு போகும் மீனவர்கள் அதிகாலை வந்து விடுவதால் மீன் உயிருடன் மார்கெட்டில் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீனவர்களுக்கு துணையாக அவர்களின் குழந்தைகள் சிறுவர்கள் உதவி செய்யும் வேலையில் வலைகளை சீர்படுத்துவது, படகுகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை கவனிப்பது உண்டு. இது நாளடைவில் படகுகளை சிறுவர்களே இயக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சில குறும்புக்கார சிறுவர்கள் தனது நண்பர்களுடன் படகுகளை இயக்கி கும்மாளம் அடிப்பதும், வேகமாக போட்டி போட்டு ஒட்டுவதும் இது வாடிக்கையாக மாறி விட்டது. இதனை காணும் சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சியில் பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

 மேலும், அலம் என்னும் கடல் முகத்துவாரத்துக்கு முன் உள்ள பகுதி சேறுபகுதி என்பதால் சிறுவர்களின் படகில் அடிக்கும் லூட்டியால் அந்த பகுதி சேறுகுளப்பாகி காட்சியளிப்பதால் மற்ற படகுகள் செல்ல இடையூறு ஏற்படுவதும், அப்படியே கவிழ்ந்தால் படகு சவாரி செய்யும் பயணிகள் சேற்றுக்குள் சிக்கி பலியாக வாய்ப்புகள் உள்ளன.  இது குறித்து, சுற்றுலா வந்த ஆசிரியர் தங்கபாபு மற்றும் நண்பர்கள் கூறியதாவது, சிறுவர்கள் படகுகளை இயக்குவது ஆச்சரியமாக இருந்தாலும் இது அவர்களது உயிரை உலை வைக்கும் செயலாக உள்ளது, இதனை காணும் என்னை போன்ற சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கலந்து பயணமாக உள்ளது. இதனை அரசு தடுக்க வேண்டும்.

என்றார். இப்படி சிறுவர்களின் சுட்டி குறும்பால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த செயலை அரசு தடுக்க முன் வருமா..? அல்லது எதையுமே விபத்துகள் சம்பவங்கள் நடந்த பிறகு தான் யோசிக்கும் அரசு இதிலும் அப்படி தான் நடந்து கொள்ளுமா..? என கூறிகிறார்கள் அப்பகுதி மக்கள்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.



பிப்ரவரி 14: சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். 

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பிலே  ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த நிலவை பிரிக்கும் அதிசயத்தை நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் கொச்சின் ராயல் பேமிலி என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (Jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர்.

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

கனிமொழியுடன் இணையதள ஆசிரியர் சந்திப்பு




சென்னை, பிப்ரவரி 14: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரான சகோதரர் ஜே.ஷேக்பரீத்  அவர்கள் கடந்த வாரம் சென்னையில் , நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினரான  கவிஞர்  கனிமொழியை சந்தித்தார் .சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற் இந்த சந்திப்பில்  முத்துப்பேட்டை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் , வருடாவருடம் இந்து முன்னணியினரால் நடத்தப்படும் விநாயகர் ஊர்வலத்தால் ஏற்படும்  விளைவுகள்  குறித்தும்  எடுத்துரைக்கப்பட்டது  .


நமது நிருபர்:

நதீம்கான்  BBA

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை...


முத்துப்பேட்டை,பிப்ரவரி 12: நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத் தள மானது கடந்த ஒரு வருடத்தை தாண்டி இரண்டாம் ஆண்டிற்கு அடியெடுத்து  வைக்கும் நிலையில் இந்த இணையத்தளம் ஊர் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று மிக சிறப்பாக இயங்கி வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இந்த இணையத்தளத்தை விரிவுப் படுத்தவும் உடனுக்குடன் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  ஆஹவே  இந்த இணையத்தளத்தில் பணி புரிய கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. 

1) நிருபர் (Reporter)  
2) DTP ஆபரேட்டர் (டங்க்லிஸ் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்)
3) சேல்ஸ் மேன் (விளம்பரம் சேகரிக்க)
4) IT பெர்சன் (இணையத்தளத்தில் ஏற்படும் கோளாரை சரி செய்ய)
5) செய்தி வாசிப்பவரி (News Reader)

ஆகிய பணிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் எங்களுக்கு கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். public.mttexpress@gmail.com மேலும் தொடர்புக்கு: 72 00 11 68 52.

குறிப்பு:

1) இதில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகைபட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2) கல்வியின் தகுதி சுமார் 12 முதல் பட்டப்படிப்பு வரை படித்திருக்க வேண்டும்.

3) இந்த துறையில் அனுபவம் உள்ளவர் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

4) தங்களின் தகுதியின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படும்.

5) இதற்கான நேர்முகத் தேர்வு முத்துப்பேட்டையில் மட்டும்  நடைபெறும்.

6) முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர் ஆகிய அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

தொகுப்பு:

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.






முத்துப்பேட்டையில் மினி லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயம்.



முத்துப்பேட்டை,பிப்ரவரி 13: முத்துப்பேட்டை செம்படவன்காடு பைபாஸ்சாலை அருகே நேற்று மாலை பட்டுக்கோட்டையை அடுத்த காசியங்காடு பகுதியிலிருந்து கீற்று ஏற்றி கொண்டு ஒரு மினி முத்துப்பேட்டை நோக்கி வந்தது. லாரியை விஜயகுமார் (32) ஒட்டி வந்தார். அப்போது, தம்பிக்கோட்டை கீழ்காட்டை சார்ந்த ராஜேந்திரன் முத்துப்பேட்டை யிலிருந்து பைக்கில் வந்து கொண்டு இருந்தார். சம்பவ இடத்தில், மினி லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. பின்னர், லாரி தலைகுப்புற கவிழந்தது, இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து, முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 
தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முகைதீன் பிச்சை

முத்துப்பேட்டை SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 12: SDPI கட்சியின் முத்துப்பேட்டை நகரத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களின் விபரம்:

 நகர தலைவர் A. முஹம்மது மைதீன், துணை தலைவர் M . ஷேக் மைதீன் , செயலாளர் M . முஹம்மது யாசிர் , துணை செயலாளர்கள் K. நைனா முஹம்மது, சர்தார், பொருளாளர் S. நிஸார் தீன் , செயற்குழு உறுப்பினர்கள் : M. சவுக்கத் அலி, H. ஹைதர் அலி, முஹம்மது ஆசிப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக PFI யின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப் A. அபூபக்கர் சித்திக் கலந்துகொண்டார்.

நமது நிருபர்:

K. கபீர் தெற்குதெரு 


முத்துப்பேட்டைக்கு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்














முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் அவர்கள் 9.2.13 மதியம் 3 மணியளவில் வருகை புரிந்தார்கள். அவருக்கு சகோதரர் ஜே. ஷேக் பரீத் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி பிரமுகர் நகர நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

சில மாதங்கள் முன் நடந்த சகோதரர் ஷேக் பரீத் திருமணம் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணத்தில் மத்திய அமைச்சர் அவர்களால் கலந்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் தற்போது வந்து அந்த குறையினை நிவர்த்தி செய்து விட்டார் அமைச்சர் அவர்கள்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 





அன்மை செய்தி : முத்துபேட்டை சுகர்னோ மரணம் :


முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டை – கல்கேணித் தெரு மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனாரும், மல்லிப்பட்டினம் மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், ஜமால், சலீம்கான், முகமது ரபிக் ஆகியோர்களின் மச்சானும், துளசியாப்பட்டினம் ஹெச். ஹாஜகான் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் மு. முகம்மது காசிம், முகம்மது அலி ஆகியோர்களின் மருமகனும், ராஜா சுகர்னோ, ஃபைசல் சுகர்னோ ஆகியோர்களின் தகப்பானருமாகிய முகம்மது ஹெச். சுகர்னோ அவர்கள் 11.2.13 காலை 4 மணியளவில் மௌத் ஆகி விட்டார்கள். (“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்”).
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிப்பவர் :
ராஜா சுகர்னோ
ஃபைசல் சுகர்னோ


நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை வந்தடைந்தத நீதி கேட்டு நெடும்பயண ஊர்தி



முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு வருகை வந்த  இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் பாக்கர் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி விட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாத் எந்த காலக்கட்டத்திலும் தேர்தலில் போட்டியிடாது வருகிற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எந்த கட்சி இட ஒதுக்கீட்டில் உறுதியாக கூறுகிறார்களோ. அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் உண்மையான குற்றவாளியாக இருந்தால் கசாப், அப்சல் குரு ஆகியவர்களை தூக்கில் போட்டதை நாங்கள் வரவேற்கிறோம். 

நாட்டிற்காக துரோகம் செய்வபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது பா.ஜ.க அரசாக இருந்து இருந்தால் இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையான ஆர்.எஸ்.எஸ். கொள்கை படைத்தவர்களான காங்கிரஸை வைத்து கச்சிதமாக முடித்து விட்டது பா.ஜ.க. எல்லாம் அமைச்சர் ஷிண்டேவை வைத்து நாடகம் ஆடிவிட்டது அரசு.

பாபர் மஸ்ஜித் இடத்தில் பா.ஜ.க அரசு இருந்த போது கோயில் கட்ட நினைக்க வில்லை ஆனால் காங்கிரஸ் அரசு பாபர் மஸ்ஜித் விசயத்தில் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்து விட்டது அப்படி இல்லையென்றால் உண்மையான குற்றவாளியான அத்வானியை தூக்கில் போட்டு இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களை கொன்ற மோடியையும் தூக்கில் இட்டு இருக்க வேண்டும் மோடி நரகத்தில் இருக்க கூடியவர் பிரதமருக்கு ஒருகாலும் தகுதியில்லாதவர் இவ்வாறு கூறினார்.

தொகுப்பு:

ஜெ. ஷேக் பரீது 


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)