முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அல் மஹா வணிக வளாகம் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு:


முத்துப்பேட்டை, டிசம்பர் 31: முத்துப்பேட்டை ஆசாத்நகர் அல்மஹா வணிக வளாகம் திறப்பு விழா நாளை சரியாக 01.01.2014 காலை 9 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி, அதனைத்தொடர்ந்து 4 மணியளவில் மருத்துவம் குறித்த சிற உரை நடைபெற உள்ளது. எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...

இந்த நிகழ்ச்சியை நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..

Source From:  www.muthupettaiexpress.com 








திருச்சியில் நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டின் புகைப்பட தொகுப்பு !!

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 28.12.13 அன்று  மாலை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடந்தது.பயங்கரவாதத்தை எதிர்த்தும்,சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இளம்பிறை எழுச்சி பேரணியும் அன்று மாலை 3.30 மணியளவில்  நடைபெற்றது.  அதன் புகைப்பட தொகுப்பு..
1003572_636709293052063_2044753942_n993496_729938767018843_2146413981_n1554451_636709016385424_1276216458_n1512705_636704443052548_216763147_n
1525415_636735969716062_717405884_n1506924_636726329717026_330938024_n1508535_636704533052539_692569244_n1512671_636709446385381_1694348485_n1511268_636709123052080_1485005555_n1493212_636708989718760_1573793756_n1480600_729870303692356_566933529_n1469940_729870857025634_2009539754_n1464626_729869103692476_2009685800_n1393485_636709036385422_1469100151_n1005830_636704429719216_707353385_n
(Visited 71 times, 70 visits today)

சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்..!!!


சென்னை, டிசம்பர் 30: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்!
பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள் 
மருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர் இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது .

ஆனால் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை.(காரணம் இருதய அறுவை சிகிச்சை அரங்கிற்கு அருகில் உள்ளதால்.)
இது பற்றி அங்கு பணி புரியும் புற்று நோய் பிரிவு மருத்துவர் மதார்ஷா நம்மிடம் கூறும் பொழுது....
இந்த பள்ளிவாசலை இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய மருத்துவர்களால் அரசுக்கு கோரிக்கை வைத்து அனுமதி வாங்கி நிர்வகித்து வருகிறோம்.
இதற்குண்டான செலவீனங்களை பணிபுரியும் மருத்துவர்களே வழங்குன்றனர் இதிலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து ஒரு இமாம் மற்றும் மோதினார் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம்.
இந்த பள்ளியிலேயே பெண்கள் தொழுகைக்கு தனியிடம் உள்ளது இந்த பள்ளியில் 5 வேலை தொழுகையும் வாரந்திர ஜும்மாவும் நடைபெறுகிறது என்றார் அவர்.

நன்றி: அதிரை புதியவன்

பெண்கள் ஓடிப்போவது ஏன்? எதற்காக?...



உலகம், டிசம்பர் 29: அப்பப்பா……விடிந்து விட்டால் போதும்! ‘ எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய் விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்’ அட அல்லாஹ்…. இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல ‘சரியான காரணங்கள்’, பல ‘காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை’கள்!
சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்….
முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!! இதற்கு காரணங்கள்தான் என்ன?
சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?
என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா? இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் எவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை? எதில் குறை? இல்லை எதில் பிழை???? கன்னியாய் ஒருபெண் படிதாண்டி சென்றாலே காலங்காலத்திற்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனக்கவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகச்செயல் அவளுக்கு மட்டுமல்ல அவள் குடும்பதிற்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். ஆனால்
அதனினும் அநியாயச்செயல் கல்யாணம் முடிந்தும், குழந்தை பிறந்தும் ஒரு பெண் படிதாண்டுவது. சிந்திக்கத்தவறி, சிந்தனைகள் குழம்பி, சீரழிவிற்கு போகும் பெண்மக்களாய் மாறுவது ஏன்? அல்லது அவர்களை மாற்றுவது எது? என வினாக்களோடு புறப்பட்ட மனதுக்குள் விடைகளென்னும் வெளிச்சம் சிறு மின்னல் கீற்றாக தென்பட்டது. அவைகளிங்கே !
தவறுகள் ஆண்களிடமிருந்தே ஆரம்பமாகிறது :
தமது மனைவியரிடத்தில் அன்பாக நடங்கள்; அவளோடு உண்ணுங்கள்; பருகுங்கள்; அவளின் தேவையறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கட்டளையிடுகிறது இஸ்லாம். ஆனால் அதை சரிவர செய்கிறார்களா கணவர்மார்கள்???
மனைவியர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை மட்டும் கொடுத்துவிட்டு, மன நிறைவை கொடுக்காது தவறிவிடுகின்றனர். பொன்னும் பொருளும் மட்டும் ஒரு பெண்ணிற்கு போதுமென்றால் அது தன் தாய்வீட்டிலோ அல்லது தனது சம்பாத்தியத்திலோ பெற்றுக்கொள்ள முடியுமே? ஆனால் அதையும் தாண்டி பாசமென்ற ஒன்றும், காதலென்ற அதீத அன்பும் அனைத்துப் பெண்களுக்கும் தேவைப்படுமென்பதை எத்தனை கணவர்மார்கள் அறிந்து வைத்துள்ளார்கள்??? கணவன் மனைவியென்றால் என்ன? புரிந்துணர்ந்து, ஈருடல் ஓருயிராய் வாழ்வதுதானே?
சரி அதுக்கும் ஓடி போவதற்கும் சம்பந்தம் என்ன என கேட்கலாம்.
மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மைக் குறைவுள்ள கணவர்கள் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டினால் தனக்கு கேவலமென்று மறைப்பதோடு மனைவின் தேவைகளை நிறைவேற்றத் தவறி, வீட்டிற்குள்ளே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் குறைகளையும் குற்றங்களையும் மனைவி மீதே சுமத்தி அன்றாட வாழ்வையே அவதிக்குள்ளாக்குவது தனது பலவீனத்தை மறைக்க! இவர்களை போன்றவர்களை அல்லாஹ் எவ்வாறு கண்டிக்கிறான் எனப் பாருங்கள்…

ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள் – 2:231
தம் மீது எக்குற்றமும் இல்லை என அனைத்திற்கும் மனைவி நியாயம் தேட முற்பட்டாலும் ‘கல்லானாலும் கணவன்’ என முத்திரையையும் குத்தி விடுகிறது இச்சமூகம். இதை விடக் கொடுமையானது இச்சமுதாயம் இந்த விஷயத்தில் ஆண்களின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தி பெண்களின் மேல் பழி போடுவதுதான்! குழந்தை பெறவோ, உடல் சுகம் கொடுக்க முடியாதவளோ உடனே கணவனால் விவாகரத்து கொடுக்க அனுமதிக்கும் சமூகம் பெண்களுக்கு மட்டும் இதை மறுப்பதோடல்லாமல் மார்க்கம் கூறியபடி அக்கணவனுடன் வாழமறுத்து வேறொரு திருமண செய்ய எத்தனித்தாள் எனில் அவள் மீது அவதூறு கூறுகிறது….அஸ்தஃபிருல்லாஹ்….
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்- 24:4
அவதூறு செய்வோருக்கு இறைவன் கொடுத்த தண்டனையைப் பாருங்கள்! தேவையற்ற அவதூறுக்கு பயந்து தானே இஷ்டம் இல்லாத வாழ்க்கை வாழ நேரிடுகிறது? இச்சமூகம்தானே அவள் தவறான பாதைக்கு செல்வதை தீர்மானிக்கிறது?
மேலும், நண்பர் என்று அதீத நம்பிக்கை வைத்து அதிகமாக வீட்டுக்குள் அனுமதிப்பது! கணவர் இல்லாத நேரத்திலும் தனியே வர அனுமதிப்பது, வெளியில் போக அனுமதிப்பது, இதனால் கணவரை விட அதிகம் நேரம், நெருக்கம் நண்பருடன் அதிகமாகிறது… அத்துடன் நண்பர்களின் குணாதிசயங்களை அதிகமாக மனைவியிடம் கூறுவதால் காதல், பாசம் உள்ளுணர்வில் ஏற்பட ஆண்களே வழி வகுத்துக் கொடுக்கின்றனர். இதனாலும் தவறுகள் அதிகரிக்கிறது.
அடுத்து தனக்கான செல்வமொன்று வீட்டிலிருப்பதையே மறந்துவிட்டு, செல்லென்னும் அழைபேசி வழியே ஆண்டுக் கணக்கில் உறவாடிவிட்டு பணம் பணம் என்று செல்வத்தின் பின்னேயே ஓடி ஓய்கின்றனர். இங்கே இவள் சொல்லியழக்கூட ஆளில்லாமல், சாய்ந்து அழக்கூட தோளில்லாமல் வாட்டம் கண்டு, வாழ்வே ஆட்டம் கண்டதுபோல் உணருகிறாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல கணவர்கள் செய்யும் செயல்களை!
குறைகளை களைந்தெறிவோம்:
சிந்திக்க வேண்டும்! குறைகள் எங்கே என்று கண்டுபிடித்து களையவேண்டும். ஓடி போன பின்பு எப்படி களைவது குறைகளை என்கிறீர்களா? முன்னோடிகளை வைத்து பின்னோடிகள் தன் பாதைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். நேற்று பிறருக்கு நடந்தவைகள் இன்று அல்லது நாளை நமக்கு நடவாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
எப்படி????
இன்றய காலகட்டம், ஆதாள பாதாளத்தின் மேல் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போலாகும். ஆகவே உங்களில் ஒவ்வொரு செயல்களும் உங்களிருவருக்கானதாக இருக்கவேண்டும். உங்கள் மனைவியர்கள் மீது முதலில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வரவேண்டும். அடுத்து அவள் மீது அதீத பாசம், அன்பு கொள்ளவேண்டும். உங்களிடம் மட்டுமே தன் தேவைகளை நிறைவேற்ற நினைக்கும் அவளுக்கு தேவையானவைகளை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அது வாங்கிக்கொடுக்கும் பொருள்களில் மட்டுமல்ல! உங்களுக்கு [மார்க்கமும் அனுமதிக்காத] பிடிக்காத காரியத்தில் ஈடுபட்டால் கண்டியுங்கள் முடிந்தவரை அன்பாக! வெளியிலிருந்து வந்தால் மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். சிடுசிடுப்புடன் இருக்காதீர்கள். உப்பு சப்பு இல்லாத விசயங்களுக்கெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். அன்பொழுக பேசாவிட்டாலும் அணுசரனையாக பேசுங்கள்.
அவளின் சில விசயங்களுக்காகவும் விட்டுக்கொடுங்கள். வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் களைப்படைந்திருந்தால் பரிவாக நடந்துக்கொள்ளுங்கள். அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள். அவளுக்கு பிடித்தபடி உடையணிந்துக் கொள்ளுங்கள். வீட்டுப்பொறுப்பு, குடும்ப நிர்வாக விசயத்தில் அனைத்திலும் அவளை கலந்துக் கொள்ளுங்கள். அவளுக்குத் தேவையானவற்றிற்கு கஞ்சத்தனம் பாராது செலவழியுங்கள். படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை உங்கள் உற்ற நண்பனிடம்கூட வெளிப்படுத்தாதீர்கள். அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்து இல்லறத்தில் உறவாடுங்கள். சிலருக்கு கண்ணியமான பேச்சுகள் பிடிக்கும், சிலருக்கு நகைச்சுவை பேச்சுப் பிடிக்கும், சிலருக்கு கொஞ்சம் கொஞ்சலாக பேசுவது பிடிக்கும். எது பிடிக்குமென்று உணர்ந்துக் கொண்டு அதுபோல் நடந்துக் கொள்ளுங்கள்.
அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்- 4:19
இவையனைத்தும் எங்கு தடைபடுகிறோ அல்லது தடைபடுவதுபோல் எண்ணப்படுகிறதோ அங்கே தவறுகள் உள்நுழைந்து மனக்கட்டுப்பாட்டை தட்டுக்கெட வைக்கிறது. அன்பையும் ஆறுதலையும் இனக்கவர்ச்சியையும் ஈர்ப்பையும் உணர்ச்சிகளையும் ஊக்கம் தரும் வார்த்தைகளையும் எதிர்ப்பார்க்கும் மனங்கள், அது கிடைக்காது ஏங்கித் தவிக்கும்போது அவையத்தனையும் ஒட்டுமொத்தமாய் கிடைக்கப் பெறும்போது, அதாவது கிடைக்கப் பெறுவதைபோல் உணர்த்தப்படுவதால் ஓடிப்போக நினைக்கிறது… பின்வரக்கூடிய விளைவுகள் புரியாமல் அதோடு தன் வாழ்க்கை அர்த்தமற்றுப் போவதை உணராமல்!!
நீங்கள் படிக்கும் காலத்தில் பெண்களோடு பழகியதுபோல்தான் தன் மனைவியும் பிற ஆண்களோடு பழகியிருப்பாள் என்ற வீணான தவறான சந்தேகத்தால் உங்கள் வாழ்க்கையின் அழகியலை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஒளிவு மறைவின்றி உங்களிடம் ஒப்படைத்த விசயங்களை வைத்து அவர்களை ‘இடுக்கு கிடைக்கும்போதெல்லாம் கொடுக்கு’ போடாதீர்கள். அப்புறம் உங்களிடம் அனைத்தையுமே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள்.. உங்களைவிட்டு ஒதுங்கியே வாழ நினைப்பார்கள்.. அப்படியே உங்களுடன் ஒட்டியிருந்தாலும் மனதளவில் ஒட்டாமலே இருப்பார்கள்..
மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்- நபிமொழி
அதுமட்டுமல்லாது நடத்தைகளில் பழக்க வழக்கங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களறியாது அவர்களை கண்காணியுங்கள். இக்காலகட்டத்தில் ஓடிப் போவோருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது செல் எனும் கைப்பேசியே! இனக்கவச்சியையும், இல்லாத ஒழுக்கங்களையும் காட்டிக்கொடுக்கிறது. சினிமாவும் சீரியல்களும். அதை அப்படியே செயல்படுத்த மன்னிக்கவும் கூட்டிக் கொடுக்கிறது கைபேசியும் கணினியும். அவற்றுடன் அவர்கள் அதிக நேரம் உரையாடல்கள் தொடர்ந்தால் அந்த நம்பரை செக் செய்துக் கொள்ளுங்கள்.. வீணாக சந்தேகப்பட்டு அப்புறம் வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

[ இவையனைத்தும் கணவர்கள் மனைவிமார்களுக்கு மட்டும் செய்யக்கூடியவைகள் அல்ல மனைவிகளும் கணவர்மார்களுக்கு செய்யக்கூடியவைகள் [சிலதைத்தவிர]. ஏனெனில் தவறுவது பெண் மட்டுமல்ல ஆணும்தான்! ஆனால் ஆணின் இச்செயல்கள் மட்டும் அழுத்தம் கொடுக்கப்படாமலே அமுக்கப்பட்டுவிடும். பெண்ணின் இவ்விழிச் செயல் ஆண்டாண்டு காலம் அசிங்கமாக பேசப்படும்..]
இவையெல்லாம் மீறி ஒன்றுமில்லாத காரணங்களுக்காக குடும்பத்தைவிட்டு குழந்தைகளை தவிக்கவிட்டு, யார் எக்கேடு கெட்டாலென்ன, மானம் காற்றில் பறந்து கந்தலானாலென்ன, தன் சுகம் மட்டுமே முக்கியம் என்று தறிகெட்டு தடம்மாறி போகிறவர்களை, உற்றார்களோ உறவினர்களோ அல்லது அந்த ஊர் ஜமாத்தோ ஊர்காரர்களோ ஏற்றுக்கொள்ளக் கூடாது. தண்டனை கடுமையானால் தவறுகள் குறையக்கூடும். என்ன செய்துவிடுவார்கள் நாளு நாட்கள் பேசுவார்கள், அப்புறம் 6 மாதமோ 1 வருடமோ ஒரு பிள்ளையை பெற்றுக்கொண்டு வந்தால் என்ன செய்யப் போகிறார்கள் என்ற நினைப்புதான் பலரை இத்தவறுகளுக்கு தூண்டுகோளாய் அமைகிறது. அதேபோன்று மனைவியிருந்தும், கணவர்கூடவேயிருந்து தவறு செய்பவர்களுக்கும் தக்க படிப்பினை தரவேண்டும். [தெரியாமல் அறியாமல் செய்துவிட்டேன், இனி அத்தவறுகளின் பக்கம் போகமாட்டேன் என்று இறைவன்மீது ஆணையிட்டு தவறை உணர்ந்தவரை தவிர]
9:106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அதைவிடுத்து இறைவனுக்காக ஏற்றுக்கொள்றேன் என்று பெயரளவில் சொல்லிவிட்டு உள்ளுக்குள் ஒரு ஒப்பாத வாழ்க்கை வாழ்வோர் நிறைய! “நீ உனக்காக வாழ்! நான் எனக்காக வாழ்க்கிறேன்! ஆனால் நாம் இருவரும் இணைந்திருந்தபடியே!” என்று வாழ்க்கை நடத்துவோருமுண்டு. நஊதுபில்லாஹி மின்ஹா. இறைவன் காப்பற்றவேண்டும். அவனே அனைத்தையும் அறிந்தவன்..

உங்கள் துணையோடு உங்களுக்கு சந்தேகமா? அல்லது உடன்படாமைகள் தொடர்கிறதா? தீர்க்கப் பாருங்கள்; அல்லது தீர்த்து விடுங்கள் [அச்சொ உயிரையல்ல] அவ[ரி]ளின் உறவை. கூடவே வைத்துக்கொண்டு குத்திக்குத்திக் காட்டுவதில் வாழ்க்கைதான் வலுவிழந்து போகும். குடும்பம்தான் நிம்மதியிழந்து தவிக்கும். ஒன்று சுமூகமான முடிவெடுங்கள்! அல்லது மார்க்கம் சொல்லித் தந்தவாறு பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். வல்ல இறைவனின் உதவியோடு இருவருமே நிம்மதி காணுங்கள்; இல்லறத்தை நல்லறமாக்குங்கள்; இல்லத்தை இனிமையாக்குங்கள்; சமுதாயத்தையும் நல்வழிப்படுத்துங்கள்!
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் – இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் – அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் 2:284

FLASHNEWS:திருச்சிமுஸ்லீம் லீக் மாநாட்டிற்கு முத்துபேட்டையில் இருந்து சென்ற வாகனம் விபத்து:

டிசம்பர் 28: முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டுக்கு 8 வாகனம் சென்றதில்  நூரா என்ற வாகனம் ஒரத்தநாட்டுக்கு அருகில் புலவன்காடு என்ற ஊருக்கு அருகே சென்ற போது  வாகனத்தின் முன் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டு விட்டது.
இதில் வாகனத்தை ஓட்டிய  சலீம் என்பவருக்கு தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. மற்றும் அதில் பயணம் செய்த  யாசர், சஃபான் இவர்களுக்கு காலில் தையல் போடும் அளவுக்கு கிழித்துவிட்டது.
நூர்தீன் மற்றும் நூர்தீன் மகன், ஹாஸ்பாவ மகன் தமீம் இவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. யாசர், சஃபானுக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் முதல் உதவிசெய்யபட்டுள்ளது.  டிரைவர் சலீம்மை தஞ்சை  அரசு மருத்துவ மனைக்கு   அனுப்பி வைக்க ஏற்பாடு நடக்கிறது.

மௌத் அறிவிப்பு: "ஹாஜிமா பஜரியா அம்மாள்"


முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை பங்களா வாசல் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் டிரைவர் S. நூர்முஹமது அவர்களின் மனைவியும், N. நத்தர்சா அவர்களின் தாயாரும், K. ரஹ்மத்துல்லாஹ், S. ஹபீபுர்ரஹ்மான் (நாச்சிகுளம்), முகைதீன் அடுமை இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா "பஜரியா அம்மாள்" அவர்கள் நேற்று 27-12-2013 காலை 9.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 28.12.2013 சனிக்கிழமை முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 
அறிவிப்பவர்.
N. நத்தர்ஷா, K. ரஹ்மத்துல்லாஹ் சகோதர்கள் 

நமது நிருபர்:

KM. காதர் கனி (பாடகர்)

டென்டருக்கான செட்யூல் காப்பி கேட்டு அதிமுக ஒப்பந்தக்காரர் ரகளை. முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் பரபரப்பு.


முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் நேற்று மங்களுர் கிராமத்தில் சாலைப்பணி 9.56 லட்சம் பொது நிதியலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் டென்டர் செட்யூல் வாங்கப்பட்டது. அப்பொழுது தம்பிக்கோட்டை கூடடுறவு வங்கி தலைவரும் அதிமுக பிரமுகரும் ஒப்பந்தக்காரருமான நாராயணசாமி நேற்று முன்தினம் அந்தப் பணிக்காக ரூ.3120-யும் அர்ச்சுணன் என்ற பெயரில் அந்தப் பணிக்கு 3120-ம் செட்யூல் தொகை கட்டியிருந்தார். நேற்று செட்யூல் காப்பி வாங்கும் நாள் என்பதால் அதிமுக ஒப்பந்தக்காரர் நாராயணசாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து மேலாளர் பாலசுப்ரமணியத்திடம் நான் பணம் கட்டியதற்கான மேற்கண்ட பணியின் செட்யூல் காப்பி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு மேலாளர் பாலசுப்ரமணியன் ஆணையர் யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கார். அதனால் ஆணையரிடம் கேட்டுத்தான் தரமுடியும் என்று கூறினார்.

 இதனால் ஆத்திரமடைந்த நாராயணசாமி தரமுடியுமா முடியாதா? என்றும் தரமாட்டேன் என்று எழுதிக் கொடுங்கள் என்றும் ரகளை செய்து தர்னாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு ஒன்றியக்குழ தலைவர் நடராஜன் ஒன்றியக்கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் நாராயணசாமியை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து ஒப்பந்தக்காரர் நாராயணசாமி கூறுகையில் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகம் மூலம் நடைபெறும் பணிகளை செய்ய முறைப்படி ஒப்பந்தக்காரருக்கு வழங்காமல் ஆணையர் தன்னிச்சையாக முடிவு செய்து அவருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்குகிறார். புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த ஆணையரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சிறை செல்லும் போராட்டம் -தீவிரமடைகிறது போராட்ட பணிகள் !!!

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
எதிர்வரும்  ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக  நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

அன்புள்ள சகோதர
 சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற  போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம்.

தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ,அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்கோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்கோ, தலைவர்களின் தர்ம தரிசனத்திற்காகவோ உங்களை அழைக்கவில்லை.
இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும் உங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும், நடத்தப்படும் உங்களுக்கான போராட்டம்.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை ஜெயட்லிதா அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை.
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும்,
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நாடெங்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதியையும் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும்  சிறை செல்லும் போராட்டம்(இன்ஷா அல்லாஹ்)
இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர்கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன்  வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதையும், மற்றவர்களுக்குச் சமமாக அரசியல் அதிகாரத்தை பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
ஆனால் உங்களின் நிலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
முஸ்லிம்களின் தியாகத்தில் இந்திய விடுதலை
இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடமிருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களைவிட நாம் அதிக உழைப்பு செய்துள்ளோம்.
வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனது மொழியைப் படிக்கக்கூடாது என்றோம்.
படிப்பைப் பாதியில் நிறுத்தினோம்.
வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.
வழிபாட்டுத் தலங்களை கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது, வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் பிரச்சார மேடையாகப் பள்ளிவாசல்களை நாம் பயன் படுத்தினோம்.
வெள்ளையன் கொடுத்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறியபோது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.
உடலாலும், பொருளாலும், உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம்.
இன்றைய முஸ்லிம்களின் அவல நிலை
நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்றுவிட்டார்களே, அதுபற்றிச் சிந்தித்தீர்களா?
கூலித் தொழிலாளியாகவோ
இறைச்சிக் கடைக்காரராகவோ
நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ
கொல்லுப்பட்டரையில் கடின வேலை செய்பவராகவோ
தோல் பதனிடும் தொழிலாளியாகவோ
பெட்டிக்கடை நடத்துபவராகவோ
குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?
சொந்த நாட்டில் தகுந்த கல்வியும், தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?
ஒட்டகம் மேய்த்தல்
சாலை போடுதல்
கழிவுகளைச் சுத்தம் செய்தல்
உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டடங்களில் கூலித் தொழில் செய்தல்
தனியாருக்குக் கார் ஓட்டுதல்
வீடுகளைச் சுத்தம் செய்தல்
சமையல் வேலை செய்தல்
இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?
மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?
இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா?
சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா
ஆகியோரின் அறிக்கைகள் கூறுவதென்ன?
88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்கவேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் பேர் மட்டும்தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே? இந்த நிலை இனியும் தொடரலாமா?
பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம்கள் மூன்று சதவிகிதம்தான் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையைவிட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?
முஸ்லிம்களின் கல்வி, அரசியல், பொருளதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தவில்லையா?
முஸ்லிம்களின் அவலநிலைபற்றி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குறிப்பிடும்போது…
முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம் என்கிறார்.  அதாவது ஒவ்வொரு நூறு முஸ்லிம்களில் 35 பேர் ஒன்றாம் வகுப்பு கூடப் படிக்கவில்லை.
ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்புவரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது.  அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்புவரை படிக்கவில்லை.
எட்டாம் வகுப்புக்கு மேல் 10 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11பேர்தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.
பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரெண்டுவரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 5 பேர்கள்தான் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளனர்.
பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் 3 பேர்தான் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.
இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்த அவலநிலை என்றால் பொருளாதர நிலையிலாவது நமது நிலை உயர்ந்திருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா?
பொருளாதாரத்தில் கடைசிநிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டி போடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.
முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் 20 காசுகளும்தான் என்கிறது அந்த அறிக்கை.
அது மட்டுமன்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.
மற்ற சமுதாய மக்களில் 100க்கு 20 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ், இருக்கும்போது, நமது சமுதாயத்தில் 100க்கு 31பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?
வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.
சொந்தமாக இடம் இல்லாதவர்கள்
இரண்டு ஆடைகளுக்குக் குறைவாக வைத்துள்ளவர்கள்
ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள்
வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள்
வீட்டு உபகரணங்கள்(டீவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள்
படிப்பறிவு இல்லாதவர்கள்
கூலி வேலை செய்பவர்கள்
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாதவர்கள்
நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்
இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா இல்லையா?
100 முஸ்லிம்களில் 35 பேர் குடி தண்ணீர் கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும்
100 முஸ்லிம்களில் 41  பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி  இல்லாத வீடுகளிலும்
100க்கு 23 முஸ்லிம்கள்தான் வசிக்கத் தகுந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் ரங்கநாத் மிஸ்ரா கூறுகிறார்.
நமக்குத் தாராளமான உரிமை கிடைத்துள்ளது என்றால், வகுப்புக் கலவரங்களில் கொல்லப்படுவதில் கிடைத்துள்ளது.
குஜராத் கலவரத்துக்கு முன்வரை நடந்த மொத்த கலவரங்கள் 3949. இதில் 2289 பேர் கொல்லப்பட்டதில் இந்துக்கள் 530 பேரும் முஸ்லிம்கள் 1598 பேரும் ஆவர். அதாவது 65 சதவிகிதம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்தான் நமது சதவிகிதத்தைவிட நான்கு மடங்கு இடம் கிடைத்துள்ளது.
நாட்டில் உள்ள சிறைச் சாலைகளிலும் நமக்கு தாரளமான இடம் கிடைத்துள்ளது. மொத்த கைதிகளில் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் உள்ளனர்.
நமது பேரன் பேத்திகளுக்கு இதைத்தான் நாம் பரிசாக விட்டுச் செல்ல வேண்டுமா?
நம்முடைய சமுதாயமும் கலெக்டர்களாக
உயர் அதிகாரிகளாக
டாக்டர்களாக, எஞ்சினியர்களாக
தொழில் நுட்ப வல்லுனர்களாக
வெளிநாடு சென்றாலும் மனைவி மக்களுடன் சென்று அதிக ஊதியத்துடன் பணி புரிபவராக
பெரிய தொழில் அதிபர்களாக ஆக வேண்டாமா?
இதுபற்றி சிந்திக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
நீதிபதி மிஸ்ரா அவர்கள் நமது அவல நிலையை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. அரசாங்கம் என்ன செய்தால் இந்த அவல நிலை மாறும் என்பதற்கான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார்.
ரெங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரை
எல்லா நிலையிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு  தனியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.
எனவே நாடு முழுவதும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100க்கு 10 என்ற கணக்கில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகளில் மட்டுமின்றி சுய தொழில் தொடங்கக் கடன் வழங்குதல் போன்ற அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் பயன் பெறுவோரில் 100க்கு 10 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போல், முஸ்லிம்களுக்கும் மதிப்பெண்களைத் தளர்த்த வேண்டும்.
உத்திரப் பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் இருப்பதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்.
தரமான கல்வியை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் நவோதயா போன்ற கல்விக்கூடங்களை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தோறும் நிறுவ வேண்டும்.
கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்.
சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு சமையல் கேஸ் இணைப்பு மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை முக்கிய பரிந்துரைகளாகும்.
நமது அவல நிலையை படம் பிடித்துக் காட்டியதுடன் மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் எனவும் மிஸ்ரா வழிகாட்டியுள்ளார்.
உரிமையை வென்றெடுக்க
சரித்திரம் காணாத அளவுக்கு ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு எட்டும் வகையில் நாம் பொங்கி எழுந்தால் மட்டுமே மிஸ்ரா அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்படும். மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்.
ஜெயல்லைதா அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி 3.5 சதவிகிதம் உயர்த்தி தரப்படும்.
நாடு முழுவதும் பத்து சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் எனபதை மத்திய அரசுக்கு உணர்த்தவும்,
மாநிலத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க மாநில அரசுக்கு உணர்த்தவும்மே இந்தப் போராட்டம்.
தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உங்களைக் காட்டி விலை பேசுவோருக்கு, உங்களை அறியாமல் உதவ பல களங்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.
இப்போது உங்களுக்காக, நீங்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்காக, உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படாமல் தடுத்து நிறுத்திட…
நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய..
இத்தனை ஆண்டுகள் ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம்  என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட ..
இடஒதுக்கீட்டை அடைய எந்த்த் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட..
குடும்பத்துடன் புறப்பட்டு வாருங்கள்
அலை அலையாய் திரண்டு வாருங்கள்
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவிருக்கும் போரட்டக்களங்களை நோக்கி புயலென புறப்படத் தயாராகுங்கள் …
இறையருளால் வென்று காட்டுவோம்.
அணி திரள அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு,
சென்னை – 600001  போன் – 044 2521 5226

திருமணச் செய்தி: "M.ஷபீர் அலி"








முத்துப்பேட்டை, டிசம்பர் 26:  ஹிஜ்ரி 1435 ஷபர்  18, 21.12.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை கிட்டங்கித் தெரு ஜனாப். முஹம்மது ஃபாரூக் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் M.ஷபீர் அலி. மதுக்கூர் ஜனாப். முஹம்மது ஃபாரூக்  அவர்களின் புதல்வி  தீங்குலச்செல்வி மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து மதுக்கூர் பள்ளி இமாம் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com 



நமது நிருபர்: 

AKLT. அப்துல் ரஹ்மான்.BBA. 

வாழ்த்துக்கள் தெரிவிக்க:

M. ஷபீர் அலி.

தொலைபேசி எண்: 0091 9750 308597... 

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ரத்ததான முகாம் -நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு !!!






























தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 நடத்திய மாபெரும் இரத்த தான 

முகாம் ,மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று 22.12.2013 நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்கள் . 

துணைத்தலைவர் நிஜாம் அலி அவர்கள் வரவேற்புரை வழங்க, மாவட்ட துணை 
\
கண்காணிப்பாளர் ( டி.எஸ். பி) ஆர். கணபதி அவர்கள் முகாமைதுவங்கி வைத்தார்கள். இதில் 37 சகோதரர்கள் இரத்தத்தை கொடையாக கொடுத்தனர். ஹாஜ அலாவுதீன் மாவட்ட மாணவரணி பேச்சாளர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் , 

மருத்துவர் இளங்கோ MBBS அவர்கள் இரத்ததானம் செய்வதினால் ஏப்படும் 

நனமைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
முன்னாள் மாவட்ட தலைவர் A.அன்சாரி மற்றும் முன்னாள் இந்நாள நிர்வாகிகள் 

முன்னிலை வகித்தனர் . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி மன்ற தலைவர் கோ . 

அருணாச்சலம் , மாவட்ட தி மு க துணை செயலாளர் M.S கார்த்திக் , ரோட்டரி மண்டல 

பொறுப்பாளர் G. கிருஷ்ணமூர்த்தி, மனித உரிமை கண்காணிப்பகத்தின் மாநில தலைவர் 

G.பஷீர் அஹமது மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இறுதியாக சேதி தொடர்பாளர் தமீம் அன்சாரி அவர்களின் நன்றிஉரையோடு நிகச்சி 

இனிதே நிறை வேறியது ...

தகவல் : முத்துப்பேட்டை செய்யது இப்ராஹிம்

மௌத்து அறிவிப்பு "ஆமினா அம்மாள் "

முத்துப்பேட்டை, டிசம்பர் 25: முத்துப்பேட்டை ஓடக்கரை தெரு, மர்ஹும் M.A.ஷாகுல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், S.ஷேய்க் அலாவுதீன், S.நெய்னா முஹம்மது ஆகியோர்களின் சகோதரியும், பசூல் ஹக் (பத்திரிகை) அவர்களின் கொளுந்தியாளும், சல்மான் அவர்களின் மாமியும், சாலிஹ், அலிஃப் ஆகியோர்களின் சிறிய தாயருமாகிய "ஆமீனா அம்மாள்"அவர்கள் இன்று (25.12.2013 புதன் கிழமை) மதியம் 2.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........

அன்னாரின் ஜனாஸா நாளை 26.12.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும்,சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக

அறிவிப்பவர்.
S.ஷேய்க் அலாவுதீன்
+91 967 771 39 79

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)