முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் TNTJ சார்பில் நடைபெற்ற மழை வேண்டி சிறப்புத் தொழுகை ..









முத்துப்பேட்டை, அக்டோபர் 07 : தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் முத்துப்பேட்டை கிளைகள் சார்பாக தமிழகத்தில் மக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதுடன் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதை அறிந்தும் மழை வேண்டி புதுத் தெரு ASN தெருவில் நடைபெற்றது. நூர் பள்ளி தலைமை இமாம் மற்றும் மாநில பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் நபிவழி முறைப்படி தொழுகை நடத்துவது எப்படி என்றும் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சிறப்புரை நிகழ்த்திவிட்டு தொழுகையை நடத்தினார். இதில் TNTJ நகர செயலாளர் முஹம்மது புஹாரி, பொருளாளர் கே.சுஹைபுகான், துணைத் தலைவர் அப்துல் வக்கீல், துணைச் செயலர் முஹம்மது லுக்மான், மாநில நிர்வாகி அன்சாரி, மற்றும் பிர்தவ்ஸ்கான், நஜிபுதீன், கட்டினானா, துபாய் சேக்காதி, நுகர்வோர் அமைப்பு நிர்வாகி சுல்தான் இபுறாஹீம், உட்பட ஏராளமான பெண்களும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர். 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் : SDPI சித்திக் பரபரப்பு பேட்டி




முத்துப்பேட்டை அக்டோபர் 07 :  SDPI கட்சியின் சார்பாக மது ஒழிப்பை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன .கடந்த 2  ஆம் தேதி முத்துப்பேட்டையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நூற்று கணக்கானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது .இந்நிலையில் வருகின்ற 11 ஆம் தேதி மது ஒழிப்பை வலியுறுத்தி  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .இது குறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் ,மற்றும் மாவட்ட தலைவர் பாவா பகுருதீன் இருவரும் கூட்டாக அறிவித்தது பின்வருமாறு: 

 SDPI  கட்சியானது சமுகதீமைகளுக்கு எதிராய் போராடக்கூடிய ஒரு மக்கள் இயக்கமாகும் .மது என்பதுசமூகத்தை வலிகெடுக்க கூடிய  ஒரு கொடிய அரக்கனாக உள்ளது . இன்றைய சூழ்நிலையை  எடுத்து பார்த்தால், முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ,கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளிக்கூட மாணவர்கள் வரை, குறிப்பாக இளைய சமுதாயம் மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் ஒரு அவல நிலை இந்த தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது . ஒருபுறம் நலத்திட்டங்களை வழங்கிவரும் தமிழக அரசு ,மறுபுறம் வீதியெங்கும் மதுக்கடைகளை திறந்து  குடும்பங்களை சீரழிக்கும் வேலைகளையும் செய்து வருகிறது .எனவேதான் தமிழக அரசின் கவனங்களை ஈர்க்கும் வகையில் ,பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டங்களை SDPI கட்சி நடத்தி வருகின்றது .

 SDPI  நடத்திய மது ஒழிப்பு போராட்டத்தை கண்ட அணைத்து அரசியல் கட்சிகளும் ,இன்று மதுவிற்கு எதிராய்  வாய்திறக்க ஆரம்பித்துள்ளது .திருவாரூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக வருகிற 17 -10 -2012 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது .மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் மாவட்டத்திலிருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கிறார்கள் .இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்கள் .
source from: www.muthupettaiexpress.com
சந்திப்பு : ஜே .ஷேக் பரீத்   

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)