முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் அடையாளம் தெரியாத 70 வயது பெரியவர் ஆற்றில் மூழ்கி சாவு!!




முத்துப்பேட்டை, நவம்பர் 14: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கோரையாற்றில் ஒரு பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு செய்திகள் வந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான ஆண் பிணம் அங்கு கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அந்த பிணத்தை த.மு.மு.க .வின் நகர தலைவர் ஜனாப். M.சம்சுதீன், த.மு.மு.க .வின் நகர பொருளாளர் ஜனாப். S.ஜெஹபர் சாதிக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜனாப் .A .அன்சாரி, TNTJ உறுப்பினர்.ஜனாப்.பசூல் ரஹ்மான் ஆகியோர் ஜனாஸாவை கைப்பற்றி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்சின் மூலம் பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பிணத்தின் உறவினர்கள் யார் என்று தெரியாமல் இருந்ததால் மேலும் இவர் முஸ்லிம் மதத்தை சேர்த்தவர் என்று தெரிந்த காரணத்தால் போலீசார் அனுமதியுடன் ஜனாஸாவை ஆசாத் நகர் முகைதீன் பள்ளி மையவாடியில் இன்று மாலை அப்பகுதி மக்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டையில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!



முத்துப்பேட்டை,நவம்பர் 14 : முத்துப்பேட்டையில் உள்ள மாற்று திறநாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, தாங்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்கு செல்ல வாகன வசதி இல்லாதவர்களா, உடனே நீங்கள் நமது திருவாரூர் மாவட்ட ஆட்சியாளரிடம் சென்று தங்களின் மனுவை கொடுங்கள். இந்த மனு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். தாங்கள் எழுதி கொடுக்க வேண்டிய விபரம்:

அனுப்புனர்:
உங்களுடைய பெயர் மற்றும் முகவரி.

பெறுனர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர், அவர்கள்
திருவாரூர்.

பொருள்:
மூன்று சக்கர வாகன பைக் வேண்டி

அய்யா:
நான் தற்போது ----------- படித்து வருகிறேன். அல்லது வேலை பார்த்து வருகிறேன், எனவே இந்த பணிகளுக்கு என்னால் சரிவர செல்ல போது மான வாகன வசதி இல்லை எனவே எனக்கு இந்த மூன்று சக்கர வாகன பைக்கை அளிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். (இதில் தங்களுடைய குடும்ப சூழ்நிலையையும் குறிப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்). இத்துடன் தாங்கள் படித்த மேற்படிப்பின் கல்விச் சான்று , பதிப்பெண் சான்று, குடும்ப அட்டை, மேலும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. ஆகியவைகளை இணைத்துக் கொடுக்கவும்.

Place :
Date :
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

பாலா (அலங்காடு)

சீன நாட்டு பணத்தி (கரன்சியி) ல் அரபி எழுத்து!!





ஹாங்காங், நவம்பர் 14 : சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் என்ற நபிமொழிக்கேற்ப அந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்ந்து வரக்கூடிய அரபியர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அந்த நாட்டு பணத்தில் (கரன்சியில்) அரபி மொழியிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான அனைத்து பணத்திலும் இந்த அரபி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன நாடு ஓர் கம்யூனிச நாடாக இருந்த போதிலும் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த நாடு முஸ்லிம்களின் முதன்மை மொழியான அரபி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் தனது நாட்டு பணத்தில் அரபி எழுத்தை பதித்துள்ளது. எனவே இந்த விஷயம் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் ஓர் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி பெருமை சேர்க்கும் வித்தத்தில் அமைந்துள்ளது.
source from www.muthupettaiexpress.com
தொகுப்பு

H.பசீர் அஹமது (ஹாங்காங்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)