முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்காண “நரகத்தை நோக்கி” என்ற தலைப்பில் ஓர் குறும்படம்



கடையநல்லூர், நவம்பர் 30 : அன்பார்ந்த இஸ்லாமிய சமுதாய சகோதர, சகோதரிகளே கடந்த சில வருடங்களாக நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினையாக இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த குறும்படத்தை எழுதி,இயக்கிய கடையநல்லூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

இப்படத்தின் மூலம் நாம் பயனடையும் நன்மைகள்:

பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் பெண்கள் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான் கதையின் கதாபாத்திரங்கள்.

அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது.

ஆங்காங்கே குரான் வசனங்கள் இந்த படத்தில் மிக அருமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:

இந்த படத்தை பார்த்து தவறான வழியை தேர்ந்தெடுக்கும் இளம் பெண்கள் திருந்த வேண்டும் என்பதே இயக்குனர் அவர்களின் நோக்கம்.

இந்த படத்தை தயாரித்தவர்களின் நோக்கம் வெற்றியடைய நாம் அனைவரும் துஆ செய்வோம்.

இந்த குறும்படம் சி.டி வடிவில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.வேண்டும் என்பவர்கள் public.mttexpress@gmail.com என்ற மெயில் முகவரி மூலம் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விபரம் அறிய இந்த தொலைபேசி எங்களை தொடர்பு கொள்ளவும் : 95513 88406

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்,அபு மர்வா

ஜாக் சார்பில் மாநாடு திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப்.டாக்டர் மீரா லப்பை பேட்டி.




முத்துப்பேட்டை,நவம்பர் 30 : "ஜம்மியத்துள் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" சார்பில் வருகிற ஜனவரி மாதம் 14 , 15 ஆகிய தேதிகளில் "படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி" என்ற முழக்கத்துடன் மாபெரும் சிர்க் ஒழிப்பு மாநாடு கோவையில் நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். டாக்டர். முஹமது மீரா லப்பை அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாரூர் மாவட்ட தலைவர் டாக்டர். முஹமது மீரா லப்பை அவர்கள், ஜம்மியத்துள் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH ) என்ற இவ்வமைப்பு சிர்க்கை ஒழிப்பதற்குத்தான் துவங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தின் மூலாதாரங்களான "திருமறைக் குர்ஆன்" மற்றும் இறுதி தூதரின் நடைமுறைகளான ஹதீஸ் ஆகிய இவ்விரண்டையும் அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டுமென்ற மற்றொரு நோக்கத்தையும் இணைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் கடந்த 23 ஆண்டுகளாக இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படை யிலான மார்க்க அறிஞர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஆண்களுக்கான அரபி கல்லூரிகளையும், பெண்களுக்கான அரபி கல்லூரிகளையும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் நிறுவி பல மார்க்க அறிஞர்களையும் உருவாக்கி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இவையன்றி சமுதாய நலன் கருதி அல்ஹுதா உயர் நிலைப்பள்ளி, அல்ஹுதா காது கேளாதோர் பள்ளி, ஹிஃப்ஸ் (குர்ஆன் மனன ) மதரசா, SSV . ஆரம்பப்பள்ளி, அல்ஹுதா நூலகம், அல்ஹுதா கம்ப்யூட்டர் செண்டர், அல்ஹுதா மாணவர்கள் இல்லம், அல்ஹுதா மாணவிகள் இல்லம், இவைகள் அனைத்தும் தற்போது திருச்சியில் பல ஆண்டுகளாக நம் சமுதாய மக்களின் நன்கொடைகள் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றும், மேலும் இதன் மூலம் அல் ஜன்னத் என்ற மார்க்க விளக்க மாத இதழையும் நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான 70 க்கும் மேற்பட்ட மர்கஸ்களை நிறுவி அவைகள் மூலம் தூய இஸ்லாமிய பிரச்சார பணிகள் நடைபெற்று வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.இது போன்று இஸ்லாமிய மார்க்கத்தினை அதனுடைய தூய்மையான வடிவிலே அனைத்து மத மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவ்வமைப்பினரால் மாவட்ட அலவிலும், மண்டல அலவிலும் அவ்வப்போது மாநாடுகளை நடத்தி வருவதாகவும் இந்த அடிப்படையில் தான் எதிர் வரும் ஜனவரி 14 , 15 ஆகிய தேதிகளில் கோவையில் இன்ஷா அல்லாஹ் இம்மாநாடு நடைபெற உள்ளது என்றும் எனவே அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை மழை நீர் வெள்ளத்தால் பாதிப்படையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்!






முத்துப்பேட்டை, நவம்பர் 29: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. எனினும் இம்மழையின் காரணத்தால் தண்ணீர் ஆங்காங்கே வெள்ளம் போல தேங்கி கிடக்கின்றன. அவற்றில் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை ரோட்டில் (பிர்லியான்ட் பள்ளிகூடம் எதிரில்) உள்ள ரஹ்மத் பள்ளிவாயில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சாலைகள், ஆகிய இடங்களில் அதிகமான வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஆசாத் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் வெள்ளம் சூழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சென்றால் நீரில் நீந்தித்தான் போகவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் அவ்வாறு செல்லக்கூடிய பள்ளி மாணவர்கள் அணிந்த ஆடைகள் மற்றும் புத்தக பைகள் இவையாவும் நுழைந்து விடுகின்றது. இதனால் அவர்களின் படிப்பில் சற்று கவனம் குறைந்தும், உடல்நிலை சரி இல்லாமல் போவதும் காரணமாக அமைந்துள்ளது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை பேரூராட்சியின் தலைவர் இவற்றை உடனே அகற்றி பொது மக்கள் மற்றும் மாணவர்களை வெள்ள நீர்களிலிருந்து பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

PFI யின் மாநாடும் அனைத்து முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பும் வியந்து போன டெல்லி மாநிலமும்








டெல்லி, நவம்பர் 29: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் சமூக எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ஏராளாமான இமாம்கள் , அரசியல் தலைவர்கள் , எழுத்தாளர்கள் , உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பல்வேறு கருத்துகளை பரிமாறினார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் ஜனாப். அப்துர் ரஹ்மான் சாஹீப் அவர்கள் கோடியை ஏற்றிய பின்னர் மாநாடு துவங்கப்பட்டன. இந்த மாநாட்டின் நுழைவாயிலில் வரக்கூடிய அனைத்து மக்களையும் மெட்டல் டிடேக்ட்டர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏனெனில் சமூக விரோதி அல்லது தீவிரவாதிகள் யாரும் உள்ள புகாத வண்ணம் இவ்வாறு நடத்தினோம் என்று போலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இம்மாநாட்டில் உணவு தொழுகைக்கான இடம் ஆகியவை தனித்தனியாக ஒதுக்கப்பட்டிருந்தன. மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கைகளை தற்பொழுதும் மேசைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமை கூட சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பலரும் முஸ்லிம்களின் பிரச்சனைகளை கேட்க கூட தயாரில்லை. முஸ்லிம்களை ஏமாற்றுவதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே போலவே உள்ளன.புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார்.சமூக நீதிக்கான அழைப்பு வெறும் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அதன் வரம்பிற்குள் வருவர். இத்தகையதொரு சமூகநீதிக்காகத்தான் நமது தேச தந்தை மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவுக்காக பாடுபட்டார். அதனால்தான் அவர் கலீஃபா உமரின் நீதியை விரும்பினார். சமூகநீதி மாநாடு முஸ்லிம்களின் துயரநிலையை மாற்றுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த துவக்கமாகும். இவ்வாறு ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம் கூறினார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் நடத்திவரும் சமூக நீதி மாநாட்டில் ’நீதிக்கான மக்களின் உரிமை’ என்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது: ‘அரசின் அனைத்து துறைகளும் முஸ்லிம்களுக்கு அநீதியை காட்டுகின்றன. கல்வி கற்ற மாணவர்களுக்கு தங்களுடைய கல்வி தகுதியே பெரும் தலைவலியாக மாறும் அளவிற்கு இந்தியாவின் புலனாய்வு ஏஜன்சிகள் நடந்துகொள்கின்றன.அஸிமானந்தா என்ற குற்றவாளி பல வருடங்களுக்கு பிறகு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அதனை கொண்டாட இங்கே ஆட்கள் உள்ளனர். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த உண்மைகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டனர். இந்தியாவில் நடந்த எந்த குண்டுவெடிப்பிலும் ஒரு முஸ்லிமுக்கும் பங்கில்லை.’ இவ்வாறு கெய்ர்னார் கூறினார்.புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.
source from www.muthupettaiexpress.com, www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி , EK.முனவ்வர் கான் . அபு மர்வா

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஓர் இளம்பெண் கற்பழிப்பு


முத்துப்பேட்டை, நவம்பர் 27 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஓர் இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதில் வேதாரணியத்தில் பத்திரிகை நிருபர் சந்தித்த அந்த நபர் கூறும்போது, "வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கின்றது என்றும், முத்துப்பேட்டையில் எந்தப் பெண்ணும் தனியாக நடமாட முடியவில்லை என்றும் மிக வேதனையோடு அவர் கூறினார்.அந்த நபரிடம் பத்திரிகை நிருபர் இது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது. கடைசி பஸ்ஸை தவறவிட்ட ஓர் கிராமத்து இளம்பெண் தனியாக நிற்பதை பார்த்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் திரு. செங்குட்டுவன் அவர்கள் அப்பெண்ணை அழைத்து விசாரித்து விட்டு பின்பு அப்பனிடம் தனியாக நிற்கக் கூடாது என்றும், காவல்நிலையத்தில் வந்து தங்கி விடிந்தவுடன் போகலாம் என்றும் பரிவாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார். பின்பு அந்தப் பெண்ணை காவல்நிலையத்தில் விட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு செண்டுள்ளார். அங்க இருந்த இரண்டு போலீசார் அந்த இளம்பெண்ணை பலவந்தமாக மாறி மாறி கற்பழித்துள்ளனர். கடைசியா இன்ஸ்பெக்டர் வருவதற்குள் போகிவிடு என்று அதிகாலை 3 மணிக்கு அந்தப் பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்தனர், அப்போது அப்பெண்ணால் நடக்க முடியாமல் சோர்ந்து போய் எதிரே உள்ள நிழற்குடையில் போய் சுருண்டு படுத்தது. அப்போது தாமதமாக வந்து இன்னொரு போலிஸ் அந்த நிழற்குடையில் வைத்தே அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளார். இதை பார்த்த அந்த ஏரியா மக்கள் இன்ஸ்பெக்டருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் என்னய்யா இப்படிப் பண்ணிடீங்கனு அந்தப் பெண்ணை மீட்டு வேதாரண்யம் போகும் குருவி பேருந்தில் ஏற்றிவிட்டார். அப்போது அந்த பெண் பேருந்தில் அழுதுகிட்டு வந்தது.அப்போது அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தான் எல்லா விபரமும் தெரியவந்தது. மறுநாள் அந்தப்பகுதி கடைக்காரவரிடம், விசாரித்தபோது, இந்த காவல்நிலையத்தில் இப்படித்தான் அடிக்கடி நடந்து வருகிறது என்றும், போன மாதம் கூட துப்புரவு வேலைக்கு வந்த ஒரு பெண்ணையும் போலீசார்கள் கற்பளித்துல்லார்கள் என்றும் மிக வருத்தத்துடன் தெரிவித்தார்.இது குறித்து இன்ஸ்பெக்டர் திரு. செங்குட்டுவன் அவர்களிடம் நாம் கேட்டபோது அப்படி எதுவும இங்க நடக்கவில்லை என்று மறுத்தார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், ரிப்போர்ட்டர் யூசுப் அலி

நன்றி - நக்கீரன்

மவுத்து அறிவிப்பு: "K .ஜெக்கரிய்யா"


முத்துப்பேட்டை,நவம்பர் 26 : செக்கடித்தெரு மர்ஹும் குஞ்சளியப்பா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் K . ஜைனுல் ஆப்தீன் அவர்களின் சகோதரரும், J .பகுருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய "K .ஜெக்கரிய்யா" அவர்கள் நேற்று மாலை 5 .30 மணியளவில் பட்டுக்கோட்டை வளவாம்புறம் அவரது இல்லத்தில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் பட்டுக்கோட்டை ஜும்மா பள்ளி வாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கிறார்கள்.
www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

J . முஹம்மது முஹைதீன்

முத்துப்பேட்டையில் வெள்ளத்தடுப்பு பணிக்காக வெளி நாட்டவர் ஆய்வு









முத்துப்பேட்டை, நவம்பர் 25 : தமிழ்நாடு பொது பணித்துறை மூலம் வெண்ணார், காவேரி, மற்றும் கல்லனைக் கால்வாய் பாசன பார்வையில் மழை நீரை பாது காப்பாக கடலுக்கு கொண்டு சேர்ப்பதற்கும், மக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் விதமாக, அவற்றிருக்கு வெல்ல தடுப்பு முறையை செயல்படுத்த ஆசியா வளர்ச்சி வங்கி முடிவு செய்துள்ளது. இந்த செயல் திட்டத்தை முத்துப்பேட்டையில் எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருமதி. சிண்டி மால்விசின் தலைமையில் ஆஸ்திரேலியா, சைனா, நிவ்ஸ்லாந்து, இலங்கை ஆகியா நாடுகளை சார்ந்த 5 பேர் கொண்ட குழு நேற்று முத்துப்பேட்டையில் உள்ள லகூன் பகுதிக்கு சென்று அவற்றை பார்த்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி சுமார் 3 மணிநேரம் வரை நடைபெற்றது. இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாரூர் செயற் பொறியாளர் திரு. A . மணி அவர்கள் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் நமது ஊரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கும், மழை நீரை பாதுகாப்பாக கடலுக்கு கொண்டு சேர்பதற்கும் வங்கியின் மூலம் நமது ஊருக்கு லோன் தருவதாக கூறினார்கள். இது குறித்து தான் அவர்கள் இன்று முத்துப்பேட்டைக்கு வருகை தந்து ஆராய்ச்சியில் இறங்கினார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இதில் காவேரி கிழக்கு செயற் பொறியாளர் திரு. பக்தவச்சலம், வனக்காவலர் திரு. மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், AKL . அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டையில் தொடர் மழையால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை







முத்துப்பேட்டை, நவம்பர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நள்ளிரவிலிருந்து பெய்து வரும் கனத்த மழையால் ஆ.நே பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிர்லியான்ட் பள்ளி, பேட்டை பள்ளி, ஆகிய அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழையால் முத்துப்பேட்டையில் வியாபாரம் சற்று குறைவாகவே இருக்கின்றது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் இம்மழையால் அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது .

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து SDPI ஆர்பாட்டம்..






முத்துப்பேட்டை, நவம்பர் 23 : பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வுக்கான பரிந்துரை ஆகியவைகளை கண்டித்து SDPI சார்பாக நேற்று காலை 11 :30 மணியளவில் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றம் எதிரே நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் சமுதாய நலம்விரும்பிகள் இதில் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். மேலும் இதனைத் தொடர்ந்து கண்டன உரை நிகழ்த்திய SDPI - யின் மாநில செயலாளர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களுக்குள்ளாக மக்கள் விரோத போக்கை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும், சட்ட சபை தேர்தலுக்கு முன்னாள் விலைவாசி உயர்வு, மின்தடை ஆகியவைக்காக அ.தி.மு.க. கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது என்றும், தற்போது தனிபெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் தொடர்ந்து சோதனைகளையும், வேதனைகளையும் செய்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். அதில் சமச்சீர் கல்வியில் மிகப்பெரிய ஓர் தடையை ஏற்படுத்தி உச்ச நீதி மன்ற ஆணையின் அடிப்படையில் அது செயல் முறைக்கு வந்தது என்றும், அண்ணா நூற்றாண்டு நூலகம் நல்லவர்களை, போராடக்கூடியவர்களை, புரட்சியாளர்களை, தலைவர்களை உருவாக்ககூடிய அண்ணா நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றியது மிகவும் வேதனைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த விலை உயர்வை ஏற்படுத்தாவிட்டால் போக்குவரத்து துறையும், ஆவின் நிறுவனமும் கடனில் மூழ்கிவிடும் என்பது உன்மைதான என்று பார்க்கும் போது அத்துனையும் பொய் என்றும் அவர் தெரிவித்தார். ஏனெனில் போக்குவரத்து துறையில் தமிழகம் முழுவதும் சுமார் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் கீழ் வருமாறு:

இதில் உள்ள வருவாயின் அடிப்படையில் மாதம் மாதம் பல நூறு கோடிரூபாய் லாபத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என்றும், எனவே போக்குவரத்து துறை எப்படி கடனில் மூழ்கி வருகிறது என்றும்,மேலும் பஸ் விலை உயர்வு 30 சதவீதம் உயர்த்தி ஏழை மக்களின் அத்தியாவாசியத் தேவையில் பெரிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளார் என்றும், 1 ரூபாய் உயர்ந்தாலே அட்சப்படக்கூடிய ஏழை மக்கள் 6 ரூபாய் உயர்ந்ததை எண்ணி ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். ஆவின் நிறுவனம் 17 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு கூறி உள்ளது என்றும் ஆனால் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாததால் தேசிய பால் வள வாரியத்திடமிருந்து மானியமாக கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாய் மறுக்கப்பட்டிருகிறது என்றும், இந்த கணக்கின் அடிப்படையில் பார்த்தால் மேல்மிட்சமாக 103 கோடி ரூபாய் வைத்திருக்க வேண்டிய ஆவின் நிறுவனம் கடனில் சென்று கொண்டிரிக்கிறது என்று கூறுவது மக்களிடம் பூச்சாண்டி வேலை காட்டுவது போல் எங்களுக்கு தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மின்சார கட்டண உயர்வை உயர்த்த இருக்கிறார்கள் என்றும், அதற்காக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பரிந்துரையும் அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் கடந்த அகஸ்ட் 4 ம் தேதி நிதிநிலை அறிக்கையின் போது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் மின் ஆளுமை முயற்ச்சிகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்றும், மேலும் உலக அளவில் தமிழ் நாடு உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டுக்கு உகந்த இடம் என்றும் கூறியதை அப்போது அவர் தெரிவித்தார்.இப்படிப்பட்ட மின்சாரத்தடை மற்றும் கட்டண உயர்வை உடனே சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட மக்களின் விரோத போக்கை கைவிட்டுவிட்டு பஸ், பால் உயர்வையும் உடனே ரத்து செய்து மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையையும் திரும்பபெற வேண்டும் என்று முத்துப்பேட்டை வாழ் மக்களின் சார்பாக இந்த ஆர்பாட்டத்தின் மூலமாக SDPI கேட்டுக்கொள்கிறது என்று அப்போது அவர் தெரிவித்தார். இதில் நகரத் தலைவர் ஜனாப்.ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட செயலாளர் ஜனாப். பாவா பகுருதீன், நகர செயலாளர் ஜனாப். முஹம்மத் முஹைதீன், மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் ஏராளமாக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், AKL.அப்துல் ரஹ்மான், ரிப்போர்ட்டர் யூசுப் (முத்துப்பேட்டை)

தடை மீறிய ரதயாத்திரை INTJ தலைவர் ஜனாப் SM .பாக்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கைது!!









மேலப்பாளையம், நவம்பர் 23 : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்த பாபர் மஸ்ஜித் ரத யாத்திரையை கடைசி நேரத்தில் ரத்து செய்த காவல் துறை கடுமையான கெடு பிடி செய்து ரதயாத்திரையை முடக்க நினைத்தது ஒரு பக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடையது நாங்கள் எந்த ரதயாத்ரையும் நடத்த வில்லை, எனவே இதை தடுக்க வேண்டும் என அண்ணன் ஜமாஅத் மேலப்பாளையம் மேலாண்மை புகார் அளித்து கொடுத்த மன உளைச்சல் இன்னொரு பக்கம் இத்தனையையும் தாண்டி சென்னையில் இருந்து ரதத்தை நெல்லை கொண்டு வந்து சேர்த்தனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல் வீரர்கள்.
காலை பத்து மணிக்கெல்லாம் மேலப்பாளையம் பரபரப்பானது! பஜார் திடலில் காவல் துறை அணி வகுப்பு நடத்தி உள்ளூர் மக்களை ரதயத்ரையில் கலந்து கொள்ள விடாமல் அச்சுறுத்திக் கொண்டிருந்தது . அனைத்தயும் மீறி வேறு இடத்தில் வைக்கப் பட்டிருந்த ரதத்தை பஜார் திடலுக்கு கொண்டு வர முயற்சித்த போது அங்கேயே தடுத்து நிறுத்த முயன்ற துணைக் கண்காணிப்பாளரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர் முற்றுகையிட்டு கேரோ செய்தனர் துணை பொது செயலாளர் இக்பால் மற்றும் மாநில செயலாளர் அபு பைசல் ஆகியோர் வந்து கடும் வாக்கு வாதம் செய்து பின்னர் ரதம் விடுவிக்கப் பட்டு தொண்டர் அணி தலைவர் கோவை பாருக் தலைமையில் அணி வகுத்து வந்த சீருடை அணிந்த தொண்டர்கள் புடை ச்சொல அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கங்களுடன் மேலப்பாளையம் வீதிகள் வழியாக பஜார் திடல் வந்தடைந்த போது உணர்ச்சி பெருக்கெடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.துணைப் பொது செயலாளர் தலைமை உரை ஆற்ற அடுத்து சமுக ஆர்வலர்கள் பத்திரிக்கையாளர் மணி, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சேலையூர் சீனிவாசன் உள்ளிட்ட மாற்று மத சகோதரர்கள் உரை நிகழ்த்தினர். இறுதியாக கண்டன உரை நிகழ்த்திய எஸ்.எம்.பாக்கர் காவல் துறையின் அராஜகத்தை கடுமையாக சாடினார். ரத்த யாத்திரை நடத்திய அத்வானிக்கு மீண்டும் ரதயாத்திரை நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்கும் தமிழக அரசு முஸ்லிம்களின் ரதயத்ரைக்கு அனுமதி மறுப்பதேன்? நாங்கள் என்ன இந்த நாட்டின் இரண்டாந்தர குடி மக்களா? என கேள்வி எழுப்பினார்.மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் திங்கள் அன்று இதை எதிர்த்து நீதி மன்றம் செல்லவிருப்பதாகவும் நீதி மன்றத்தில் அனுமதி பெற்று ரத யாத்ரையை நடத்தியே தீருவோம் என முழங்கினார்.பின்னர் காவல் துறை தான் கைது நடவடிக்கையை துவங்கியது நூற்றுக்கணக்கனோர் நெஞ்சுறுதியோடு பதினைந்து நாள் ரிமாண்டுக்கு தயாராக தங்கள் உடைகளோடு வந்திருந்தது காவல் துறையினருக்கு வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்தில் தொழுகை பயான்என மிகவும் பயனுள்ளதாக நேரம் சென்று கொண்டிருந்தது.ஏறாலமன் பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் இந்நிகழ்ச்சியை படம் பிடித்தனர் . மாலைப் பத்திரிக்கைகள் இந்த நிகழ்வை முதன்மை செய்திகலாக்கியது. நடு நிலை கொண்ட காட்சி ஊடகங்களும் செய்திகளில் ஒளிபரப்பியது.முதலில் ரிமாண்ட் என பூச்சாண்டி காட்டிய காவல் துறை இறுதியில் மாலை ஏழு மணிக்கு விடுதலை செய்தது. அல்ஹம்து லில்லாஹ் எல்ல்லப் புகழும் இறைவனுக்கே!
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,அபு மர்வா,

முத்துப்பேட்டையில் புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை!!




முத்துப்பேட்டை, நவம்பர் 22: முத்துப்பேட்டையில் திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி வயது (25 ) இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமாகிறது. இவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டை கீழ்க்காட்டில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 19 ம் தேதி காலை சதீஸ்குமார் மனைவி பரமேஸ்வரியை தந்தை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றார். அதன் பின் பரமேஸ்வரி அருகே உள்ள பாமணி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவளர் திரு கண்ணன் அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் முழுவதும் ஆற்றில் இவரது உடலை தேடினர். இந்நிலையில், நேற்று பாமணி ஆற்றில் கரை ஒதுங்கிய பரமேஸ்வரியின் உடலை முத்துப்பேட்டை போலீசார் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து, வி ஏ ஓ கமலதியாகராஜன் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமேஸ்வரிக்கு திருமணமாகி 4 மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தார என்பது குறித்து மன்னார்குடி ஆர். டி. ஓ. திரு. செல்வராஜ் விசாரணை செய்து வருகிறார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK.முனவ்வர் கான், AKL . அப்துல் ரஹ்மான், அபு மர்வா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)