முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவும் நடந்து முடிந்த நிகழ்சிகளும். ஓர் பார்வை...

















முத்துபேட்டை,டிசம்பர் 31 : முத்துபேட்டையில் பல கோடி ரூபாய் பதிப்பீட்டில் கட்டப்பட்ட நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் நிர்மான கமிட்டி தலைவர் தலைமை வகித்தார், நிர்மான கமிட்டி செயலர் ஹாஜி.ஜனாப். MKN .முஹம்மது முஹைதீன் வரவேற்று பேசினார், பிரிலியன்ட் பள்ளி தாளாளர் ஜனாப். முஹம்மது யாகூப் தொகுப்புரையாற்றினார், பிரபல தொழிலதிபர்களான ஜனாப். தஞ்சாவூர் L .கமால் பாட்சா, ஜனாப். MA .யாகூப், ஜனாப். MA . தமீம், ஜனாப். சென்னை MN . ஜெக்கரிய்ய, ஹாஜி. ஜனாப். வக்கீல் சலீம் கான், நிர்வாகிகள், AK . அஹ்மத் ஹுசைன், ANM.நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திறப்பு விழாமலரை MA .முஹம்மது யாகூப் வெளியிட அல்மஹா அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப். SM .ஹைதர் அலி பெற்றுக்கொண்டார். பள்ளியின் செயலாளர் ஜனாப். MKN . ஜெகபர் அலி துவக்க உரையாற்றினார், சென்னை மதரசாயே நிஸ்வான் முதல்வர் KM . முஹம்மது யூசுப் ரஸ்ஸாதி,சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி பேராசிரியர் M .முஹம்மது அபுதாகிர் பாசில் பாக்கவி, சிறப்புரையாற்றினார்கள். முத்துப்பேட்டையை சேர்ந்த வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது. முத்துப்பேட்டை நகரம் என்பது ஓர் வரலாறு படைத்த சிறந்த ஊர் என்றும், இங்கு சமுதாய சிந்தனையாளர், நற்குனமுடயவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும்,மேலும் இந்த மண்ணின் சொந்தங்கள் வரலலற்றில் சிறப்படைந்தவர்கலாக உலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஊரில் ஒருஒருக்கொருவன் அண்ணன் தம்மியாக வாழ்ந்து வருவது மிக மகிழ்ச்சியை தருகிறது. மேலும் பள்ளிவாசல் தூய்மை படுத்தப்பட்ட தொழுகை கூடம் மட்டுமல்ல என்றும், சமுதாயத்தில் நல்ல உள்ளம் படைத்தவர்களாகவும், நல்ல திறன் படைத்தவர்களாகவும், நாளைய சமுதாய இளைஞர்களை உருவாக்காத்தான் பயன்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தொழுகை என்பது இஸ்லாத்தின் அவசியமான ஒன்றாகும். இது குறித்து நான் ஒருமுறை பாராளுமன்றத்தில் பிற நாட்டு விமான நிலையங்களில் பிற நாடுகளை போன்று இஸ்லாமியர்கள் இல்லாத நாடுகளை போன்று தொழுவதற்கு ஒரு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். அப்போது பதிலளித்த மத்திய அமைச்சர் பிராஸ் பட்டேல் மிகவும் ஓப்பனாக தொழுவத்துக்கு இடம் கொடுத்தால் இந்துக்களும் மற்ற சமுதாயத்தவரும் அவரவருக்கு இடம் வேண்டும் என்று கேட்பார்கள் இதனால் விமான நிலையத்தில் விமானம் இறங்க இடமே இருக்காது என்று அவர் தெரிவித்தார். அப்போது நான் மற்ற சமுதாயத்தில் உள்ள வணக்கம் போல இஸ்லாத்தில் இல்லை என்றும், சரியான நேரத்தில் ஒவ்வொரு தொழுகையை தொழவேண்டும் என்றும், விமானம் விட்டு விமானம் மாறும் போதும் சரியான நேரத்திகுள் விமானம் வந்து செல்லும் போதும் அதனை பயன் படுத்திகொள்ளலாம். என்றும் நேரம் தவறினால் அந்த தொழுகையையும் தவறிவிடும் அதனால் தன நான் இவ்வாறு கேட்கிறேன் என்றும் கூறினேன். தோலும் இடத்தில் சிலை தேவை இல்லை, குர் ஆனை அடுக்கி வைக்க தேவை இல்லை, பிறை கோடி போன்ற எதுவும் தேவை இல்லை, எங்களுக்கு தேவை ஓர் தூய்மையான இடம் தான் இறைவனை நினைத்து மனதில் நாங்கள் வணங்குவோம் என்றேன். எனவே விமான நிலையத்தில் ஓர் சிறிய இடம் கொடுத்தால் போதும் என்றேன். இது குறித்து அந்த அமைச்சர் கூறும் பொது இது வரைக்கும் எந்த ஒரு இஸ்லாமிய சகோதரரும் என்னிடம் தொழுகையைப் பற்றி கூறியது இல்லை தொளுகைபற்றி நீங்கள் எனக்கு புரியவைத்ததற்கு மிக நன்றி என்றும் அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் டெல்லி விமான நிலையத்தில் இந்தியாவிலே முதன் முதலில் அமைத்து தந்தார் இவ்வாறு இந்த அமைச்சர் தெரிவித்தார். பின்னர் பல்லாயிரக்கனக்கான இஸ்லாமியர்கள் குத்பா பள்ளி ஜும்மாஹ் தொழுகையில் கலந்து கொண்டனர். இதன் பின்பு சாப்பாடு பொட்டணம் வழங்கப்பட்டன. இந்த முன்னாள் நாள் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்ட குத்பா பள்ளி திறப்பு விழா மலர்.


முத்துப்பேட்டை, டிசம்பர் 30 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கவிதை, கட்டுரை, விளம்பரம், இஸ்லாமிய செய்திகள் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நூலை மூன்று பேர் கொண்ட ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலை ஒருங்கிணைத்து தந்த HMA. மன்சூர் மரைக்காயர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நூலை இலவசமாக வெலியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
தொகுப்பு

மலர் வெளியிட்டுக்குழு

வெளிநாட்டு வாழ் நண்பர்களின் வாழ்த்தும் குத்பா பள்ளி திறப்பு விழாவும்...

முத்துப்பேட்டை, டிசம்பர் 30 :லண்டன் வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்:

All the best. May allah accept the people's
prayers and dua's and make the wishes and dua's
come true. Also may allah give every one a happy and peace full life.
ஃபைசல் சுகர்னோ:

அனைவரின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றேண்டும் நிலவட்டுமாக!
குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

குத்பா பள்ளி திறப்பு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டு வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்..

முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : சபீர் அஹமது:

புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு கூடும் பள்ளியாக இருக்க வேண்டும்.

மூன் லைட்:

பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

முஹம்மது ராஜா சுகர்னோ

நமது ஊர் முத்துக்கள் குவியும்
முத்துபேட்டையின் முதல் குத்பா பள்ளி
நாணுறு வருடங்களென வரலாறு சொல்கிறது..!!
அக்காலப்பள்ளியை இக்கால வசதிக்கேற்ப
வழங்கியருளிய வல்ல இறைவனுக்கு
வாழ்நாள் தோறும் வாஞ்சையோடு
நம் நன்றிகள் பல..

எங்கள் ஊரில் பள்ளிகள் பதிமூன்றிந்தாலும்
எல்லாவிதமான தேவைகளுக்கும்
எல்லோரும் அடியெடுத்து வைக்கும்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கள் ஊருக்கு வழங்கிய
வரலாறு கண்ட வாஞ்சையான பள்ளி..

எங்கள் ஊரின் அழகிய ஆற்றங்கரையோரம்
அமைதி நிலவ இதமாக வீசும் இளந்தென்றல்
காற்றை தனக்கே சொந்தமாக்கி தக்கவைத்துகொண்டிருக்கும்
தனித்துவப்பள்ளி..எங்களூரின் குத்பா பள்ளி..
எங்களுரின் ஏகாந்தபள்ளியை பற்றி எழுத எழுத ஏடுகள் காணாது..!!

ஏக இறைவன் எங்கள் ஊருக்கு
வழங்கியருளிய வாஞ்சைப்பள்ளியின்
புதிய திறப்பு விழாவிற்கு வருகை தரும்
அனைவரையும் வரவேற்று வாழ்த்துவதோடு
இந்த இதமான தருணங்களை இணையத்தில்
இழையோட செய்யும் இனிய சகோதரர்களுக்கும்
வாழ்த்துகளும் நன்றிகளும் பல சொல்லும்.

சுல்தான் அப்துல் காதர்:

பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முஹம்மது ஷேக் தாவூத் (ராஜா:

பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

M. அஹமது கபீர்:

பள்ளி வாசல் திறப்பு விழா நல்ல படியாக அமைய அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

மேலும் தங்களுடைய வாழ்த்துகளை எதிர்பார்க்கிறோம்...

திறப்பு விழாவிற்கு நான் தயார்,குத்பா பள்ளி பேட்டி...











முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : முதன் முதலாக முத்துப்பேட்டை நகருக்கு சுமார் 400 வருடத்திற்கு முன்பு எந்த பெயரும் இல்லாமல் வெறும் பள்ளி வாசல் என்ற பெயரில் அடியெடுத்து வைத்தேன். நான் அடியெடுத்து வைத்த பகுதியான மரைக்காயர் தெருவில் பெருவாரியான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதன் முதலில் என்னுடைய இடத்தில் குத்பா தொழுகையை நடத்தினார்கள். (இந்த ஊரில் முதல் குத்பா நடந்தது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது) இதனால் எனக்கு குத்பா பள்ளிவாசல் என்று எனக்கு பெயரிடப்பட்டது. பெயரில்லாமல் வந்த எனக்கு பெயரிட்டு கண்ணியப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

இதனைத்தொடர்ந்து காளங்கள் நகர்ந்தன. என்னிடம் வந்து இறைவனை வணங்கிய எண்ணிலடங்கா மக்களை நான் அவ்வப்போது இழந்திருக்கிறேன், இதனை எண்ணி நான் ரொம்பவும் வருந்துவதுண்டு. முன்னோர்கள் சென்றாலும் வரக்கூடிய காலங்களில் உள்ள மக்களை எண்ணி, என்னிடம் அதிக தொடர்பை ஏற்படுத்தக் கூடிய மக்களை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் மிக குறைவான மக்களே என்னிடம் வருகிறார்கள். ஏன் நான் ஒரு பழைய பள்ளிவாசல் என்ற பெயரிலா அல்லது என்னுடைய வருகை இவ்வூர் மக்களுக்கு பிடிக்க வில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்மாஹ், மற்றும் பெருநாள் தொழுகை ஆகிய தொழுகைக்கு மட்டும் என்னை கையில்பிடிக்க முடியாது. ஏனெனில் அன்று மட்டும் இவ்வளவு மக்கள் கூட்டம் என்னிடம் வந்து இறைவனை வணங்குவதை பார்த்தால் ஆனந்த கண்ணீர் வரும்.

ஆனால் சாதாரண 5 வேலை தொழுகையில் மிகவும் நான் கைசேதம் அடைந்தது போல் என் முகம் காட்சி தரும். இதனைக்கண்டு நான் அஞ்சுவதில்லை என்னிடம் வந்து இறைவனை வணங்க மிகப்பெரிய கூட்டம் வருங்காலங்களில் அதிகமாக என்னுடைய இடத்திற்கு வருகை தந்து என்னை சிறப்பிப்பார்கள் என்ற என்னத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவினை எதிர்நோக்கி இருக்கிறேன்.

குறிப்பு:

இந்த குத்பா பள்ளி திறப்பு விழாவினை முன்னிட்டு அனைத்து கட்சி நண்பர்களும், இஸ்லாமிய அனைத்து இயக்கத்தினரும் மற்றும் ஊர் பொது மக்களும் அவரவர் கட் அவுட் வைத்து வண்ணம் முத்துப்பேட்டை நகரை குதூகலமக்கிவருகிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹம்மது இல்யாஸ், 

முத்துப்பேட்டை:இஸ்லாமியர்கள் கட்டிய தோரனக்கொடிக்கு கீழே BJP கொடி கட்டியதால் பரபரப்பு



முத்துபேட்டை, டிசம்பர் 29 : முத்துப்பேட்டையில் நாளை குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய ஊர்களிலிருந்து லச்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும், இதில் மன்னார்குடி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, பட்டுக்கோட்டை சாலை, பேட்டை சாலை, ஆகிய இருபுறங்களிலும் வண்ண விளக்குகளும், டீப்லைடுகளும், இஸ்லாமிய கோடி தோரணங்களும், விளம்பர போர்டுகளும் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளனர். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருத்துறைப்பூண்டி சாலை வரை இஸ்லாமியர்கள் கட்டிய தோரனக்கொடிக்கு கீழே BJP கோடியை நேற்று நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடியை பொதுமக்கள் காலையில் பார்த்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏதும் நிலவாமல் இருக்க முத்துப்பேட்டை நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் பொது மக்களிடம் விசாரித்ததில் இன்று BJP - யின் தெருமுனை பிரச்சாரம் நாடக்க உள்ளதாகவும் இந்த பிரசாரத்திற்கு BJP யின் மாநிலத்தலைவர் H .ராஜா வருவதாகவும் விசாரித்ததில் தெரிய வருகிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexppress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா, முஹைதீன் பிச்சை, சுபைத் கான், மர்சூக் அஹ்மது, TR .அப்துல் ரஹ்மான்.

முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவின் நிகழ்ச்சிகள் ஓர் பார்வை...


முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : முத்துப்பேட்டை புதுபிக்கப்பட்ட குத்பா பள்ளி வாசல் திறப்பு விழா வருகிற ஹிஜ்ரி 1433 ஸஃபர் பிறை 4 வெள்ளிக்கிழமை 30 .12 .2011 காலை 9 : 30 மணியளவில் நடைபெறும்.

நிகழ்சிகளின் விபரம் பின் வருமாறு :
தலைமை: ஜனாப். E . அப்துல் ஜலீல். M .E .S .Co . சிங்கப்பூர்.
கிரா அத் : குத்பா பள்ளி பேஷ் இமாம்.
வரவேற்புரை : ஹாஜி. ஜனாப். MKN . முஹம்மது முஹைதீன் செயலாளர் நிர்மான கமிட்டி.
நிகழ்ச்சி தொகுப்பாளர் : ஹாஜி. ஜனாப். A .முஹம்மது யாகூப். M.A.BED.

முன்னிலை:
ஹாஜி.ஜனாப். கொய்யா. SMKN .முஹம்மது தாவூத் நிர்மான கமிட்டி தலைவர்.
ஹாஜி.ஜனாப். L . கமால் பாட்ஷா. (தஞ்சாவூர்)
ஹாஜி.ஜனாப்.AK . அஹமது ஹுசைன்.
ஹாஜி.ஜனாப். ANM . நெய்னா மரைக்காயர்.
ஹாஜி.ஜனாப். MA . யாகூப்.
ஹாஜி.ஜனாப். MA . தமீம்
ஹாஜி.ஜனாப். NM . ஜெக்கரியா (சென்னை)
ஹாஜி.ஜனாப். T . சலீம் கான்.BA .BL .
திறப்புவிழா மலர் வெளியீடு: ஹாஜி.ஜனாப். MA . யாகூப்
திறப்புவிழா மலர் பெறுபவர் : ஜனாப். SM. ஹைதர் அலி. நிறுவனர் அல்மஹா அறக்கட்டளை.
துவக்க உரை : MKM. ஜெகபர் அலி.
வாழ்த்துரை : ஹாஜி.ஜனாப்.J .MA .ஹாரூன்.MP.,ஹாஜி.ஜனாப்.MA .அப்துல் ரஹ்மான் MP.

சிறப்பு பேருரை : மவ்லானா KM.முஹம்மது யூசுப் ரஷாதி.முதல்வர் மதரசாயே நிஸ்வான் - சென்னை.
மவ்லானா MA . முஹம்மது அபுதாகிர் ஃபாசில் பாக்கவி. தேவ்பந்தி. பேராசிரியர் நூருல் இஸ்லாம், அரபிக்கல்லூரி சேலம்.

அடிக்கல் நாட்டுதல்: ஜனாப். A. அப்துல் ஜலீல். M .E .S .Co . சிங்கப்பூர்.
நன்றியுரை : ஹாஜி. ஜனாப். A . முஹம்மது முஹைதீன். தலைவர் குத்பா பள்ளிவாசல்.

அழைப்பது குத்பா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள்.
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா, சுபைத் கான், மர்சூக் அஹ்மது, TR .அப்துல் ரஹ்மான்.

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவும்! அலங்கரிக்கப்படும் முத்துப்பேட்டை நகரமும்...










முத்துப்பேட்டை, டிசம்பர் 28 : நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு இஸ்லாமிய ஊர்களிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முறையில் முத்துப்பேட்டை நகர் முழுவதும் அற்புதமாக தோற்றத்தை தர வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எல்லா பணிகளையும் அவரவர் பொறுப்பேற்று முழு முயற்சி உடன் முத்துப்பேட்டை நகரை அலங்கரித்து வருகின்றனர். அதில் பச்சை கொடி (தோரணம்) , ஊர் முழுவதும் டியூப் லைட், நிகழ்ச்சிக்கான ஸ்டேஜ், சுவர் விளம்பரம், வால் போஸ்ட் விளம்பரம் என பல்வேறு முறையில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான், அபு மர்வா, சுபைத் கான், மர்சூக் அஹமது

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்:


முத்துப்பேட்டை, டிசம்பர் 25 : அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனானமும் என்றென்றும் நிலவட்டுமாக! வருகிற 30 .12 .2011 அன்று நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு நமதூர் வாசிகள், வெளிஊரு வாசிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் கண்டு மகிழும் பொருட்டு அந்நிகழ்வை நேரடி ஒலிபரப்பு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நேரடி ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு:
திறப்பு விழா சிறப்பு நிகழ்சிகள் காலை 8 .30 மணியளவில் இருந்தே ஒளிபரப்பப்படும்...
காண்க: www.muthupettaiexpress.blogspot.com,
இந்த இணையதளத்திலும் காணலாம்: adiraixpress.blogspot.com

ஓர் நற்செய்தி!! : அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்


சென்னை, டிசம்பர் 25 : இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.
இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?இதனை பற்றி விவரமாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ பார்க்கவும்
Link à ஆளும் சக்தியா? அதிகார சக்தியா?
இதற்காக உருவாக்கப்பட்டது தான்
Al-Idara I.A.S guidance center
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்
இதன் நோக்கம்
நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
ஆலோசனை குழு
இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.

ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
அடிப்படை தகுதிகள்
ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்
21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்

தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795
ஈமெயில் : admin@makkamasjid.com

முத்துப்பேட்டையில் TNTJ சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்










முத்துப்பேட்டை, டிசம்பர் 19 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் திடலில் TNTJ வின் மாவட்ட செயாளர் ஜனாப். AM . புஹாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் பேசிய மாவட்ட பேச்சாளர் ஜனாப். அல்தாப் ஹுசைன் அவர்கள், நமது சமுதாயத்தில் உள்ள இயக்கங்கள் அனைத்தும் பல்வேறு முறையில் பிரிந்து கிடக்கிறது என்றும், அல்லாஹ் கூறிய ஒற்றுமை என்ற கையிற்றை பற்றிபிடித்தோமானால் அதிகமான நன்மைகள் நம்மை வந்து சேரும் என்றும், அவர் தெரிவித்தார். ஆனால் ஒற்றுமையாக இருந்த சமுதாயத்தை பிரித்தது TNTJ தான் என்று அவதூறாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும், ஆனால் எல்லோரும் சேர்ந்து மது அருந்துவது, வட்டி வாங்குவது, போன்ற தவறான செயல்களை செய்பவர்களை கண்டிக்காமல் நாங்கள் ஒற்றுமையை பேணி வருகிறோம் என்ற பல அமைப்பினர் மற்றும் இயக்கத்தினர் தன்னை மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றும், ஆனால் TNTJ --வை பொறுத்தவரையில் இஸ்லாம் கூறியதை மட்டும் தான் பின்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரதச்சனை ஒழிப்பு என்ற தலைப்பில் பேசிய TNTJ வின் மாநில செயலாளர் ஜனாப். அச்ரப்தீன் பிர்தவுஸ் அவர்கள் நமது சமுதாயத்தில் வரதச்சனை என்ற ஓர் செயலால் இஸ்லாமிய பெண்கள் 30 வது வரை திருமணம் ஆகாமல் இருந்து வருகிறார்கள் என்றும் எனவே இந்த கொடிய நோயை நம் இளைய சமுதாய இளைஞ்சர்கள் கையிலெடுத்து அவற்றிருக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இஸ்லாத்தில் அதிகமான பெண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து வருகிறார்கள் என்றும் அவற்றை செய்வதற்கு இஸ்லாம் தடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டு அவற்றை திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் வாசித்தது பின்வருமாறு:
TNTJ பொதுக்கூட்டத்தின் மூலம் போடப்பட்ட தீர்மானங்கள்:
1 ) முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குளங்களையும் உடனே தூர்வாரி பொது மக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும்.
2) நூற் பள்ளி வாசல் இருக்கும் இடத்தில் உள்ள சாலைகளுக்கு உடனே சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.
3 ) ஆசாத் நகர் புதிய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றும், மேலும் ஆசாத் நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் வடிக்கால் கலை உடனே தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
4 ) முத்துப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் பாடப்பிரிவிற்கு முறையான ஆசிரியர்களை உடனே பணியமற்ற வேண்டும்.
www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EK . முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி, M .சுபைத் கான், EK . மர்சூக் அஹமது,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)